ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது, கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி பெற்று தொடரை 4- 1 என்று கைப்பற்றியது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி டிவிலியர்சின் அதிரடி 115* மூலம் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 151 ஓட்டங்களுக்குச் சுருண்டு பரிதாப தோல்வி தழுவியது.
டிவிலியர்ஸ் சதம் அடித்ததன் மூலம் 6000 ஒருநாள் ஓட்டங்களை அதிவேகமாக எடுத்த தென் ஆப்பிரிக்க பெட்ஸ்மென் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
டிவில்யர்ஸின் முதல் அரை சதம் மிகவும் மந்தமாக 70 பந்துகளில் எடுக்கப்பட்டது. ஆனால் அவரையெல்லாம் நிற்கவிட்டால் என்ன ஆகும் என்று தெரிந்தது. அடுத்த 50 ஓட்டங்கள் 29 பந்துகளில் விளாசப்பட்டது.
6வது விக்கெட்டுக்காக மெக்லாரனுடம் இணைந்து 83 ஓட்டங்கள் சேர்த்தார் டிவிலியர்ஸ். கடைசி 10 ஓவர்களில் 114 ஓட்டங்கள் எடுத்தது. டிவிலியர்ஸ் மிகப்பெரிய சிக்சர் மூலம் சதத்தை பூர்த்தி செய்தார்.
பாகிஸ்தானுக்கு சாதகமாகவே நேற்று ஸ்டெய்ன், மோர்கெல், இம்ரான் தாகிர் ஆகியோர் அணியில் இல்லை இருந்தாலும் பார்னெல், பிலாண்டரே அந்த அணிக்கு போதுமானதாக இருந்தது.
துவக்கத்தில் ஹஷிம் அம்லாவை மீண்டும் உயரப்பந்து வீச்சாளர் மொகமட் இர்பான் வீழ்த்தினார். 8 ஒருநாள் போட்டிகளில் 5வது முறையாக ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீரர் அம்லாவை வீழ்த்தியுள்ளார் இர்பான்.
பிறகு கடந்த போட்டியின் சத நாயகன் டி காக் மற்றும் டுபிளெசிஸ் கொண்டு சென்றனர். ஓவருக்கு4 ஓட்டங்களே வந்தது. ஆனால் டீ கா திடீரென மொகமது இர்பானை 4 பவுண்டரிகளை ஒரே ஓவரில் அடித்தார். இதில் இரண்டு இன்ஸைடு எட்ஜ் என்பது வேறு விஷயம்.
உடனே பந்து வீச்சில்... மாற்றம் செய்யப்பட்டு அஜ்மல் வந்தார் டீ காக் எல்.பி ஆனார். டுமினியும் சொற்ப ஓட்டங்களில் வீழ்ந்தார். இப்போது டிவிலியர்ஸ் , டுபிளெசி களத்தில் இருந்தனர். ஓட்டங்கள் வறண்டன, ஸ்பின்னர்கள் கட்டுப்படுத்தினார். இருவரும் 16 ஓவர்களில்3 பவுண்டரிகளையே அடிக்க முடிந்தது.
டுபிளேசி வெறுப்பில் அவுட் ஆக, டிவிலியர்ஸ் முதலில் அஜ்மலை ஒரு புல் செய்து சிக்சருக்கு விரட்டினார். மெக்லாரன் இர்பானை 2 பவுண்டரிகளை விளாசினார். பிறகு ஜுனைத் கான் வீசிய 47வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். தன்வீர் படு மோசமாக வீசியதை டிவிலியர்ஸ் தனக்கு படைக்கப்பட்ட விருந்துவாகவே வெளுத்து வாங்கினார்.
15வது ஒருநாள் சதத்தை எடுத்தார் டிவிலியர்ஸ். பாகிஸ்தான் துரத்தலை தொடங்கியபோது துல்லிய பிலாண்டரிடம் 2விக்கெட்டுகளை பறி கொடுத்து சடுதியில் 17/3 என்று ஆனது. ஷோஹைப் மக்சூத் மட்டுமே அரைசதம் கண்டார். அவர் தொடர்ச்சியாக 2வது அரைசதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்டநாயகனாக டிவிலியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக ஆல் ரவுண்டர் மெக்லாரன் தேர்வு செய்யப்பட்டார்.

0 comments:
Post a Comment