சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, November 29, 2013

க.பொ.த சா/த மாணவர்கள் நலன் கருதி ஆட்பதிவு திணைக்களம் சனியன்றும் திறப்பு

By on 8:52 PM

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பொருட்டு, ஆட்பதிவுத் திணைக்களம் விடுமுறை நாளான எதிர்வரும் 7ம் திகதி சனிக்கிழமையும் திறந்திருக்கும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் சரத்குமார தெரிவித்துள்ளார்.


இவ்வருடத்திற்கான க.பொ.த சா/த பரீட்சைகள் டிசம்பர் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.


இந்நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் தேசிய அடையாள அட்டை இன்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனை அடுத்தே சனிக்கிழமையும் ஆட்பதிவு திணைக்களத்தை திறந்து மாணவர்களுக்கு சேவை புரிய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment