சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Saturday, December 28, 2013

ரயிலில் இருந்து குதித்த இரு முஸ்லிம்கள் உட்பட மூவர் பலி!

By on 1:25 AM

மாத்தறையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற ரயில் என்ஜின் இயந்திரம் தீ பிடித்த காரணத்தினால் ரயிலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் வெளியில் பாய்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.



கணவன்-மனைவி ஜோடி மற்றும் இளைஞன் ஆகியோர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



நேற்று (27) மாலை 6.40 அளவில் ரயில் என்ஜின் இயந்திரத்தில் தீ ஏற்பட்டுள்ளது.



இதனையடுத்து பீதியடைந்த பயணிகள் ரயில் இருந்து குதித்துள்ளனர். இதன் போது மறுபக்கத்தில் வந்த ரயிலில் மோதுண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.



54 வயதுடைய மொஹமட் தவுபிக்இ 47 வயதுடைய ஹைருன் நிஷா மற்றும் 28 வயதுடைய புத்திக நிரோஷன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.



சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை இன்று (28) இடம்பெறவுள்ளது.

0 comments:

Post a Comment