சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, December 4, 2013

ஐசிசி ஒருநாள் அணித்தலைவராக டோனி தெரிவு

By on 7:55 AM
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) இந்த ஆண்டின் டெஸ்ட் அணி மற்றும் ஒரு நாள் அணிக்கான தலைவர்களாக இங்கிலாந்தின் அல்ஸ்டார் குக் மற்றும் இந்தியாவின் மகேந்திர சிங் டோனி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அந்த ஆண்டிற்கான சிறந்த வீரர்களை கொண்ட அணியை அறிவித்து, அவர்களை கெளரவிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அதே போல, தனித் திறமைகளையும் அங்கீகரித்து பல விருதுகளை வழங்கி வருகிறது.

ஒரு நாள் போட்டிக்கான தலைவராக டோனி தேர்ந்தெடுக்கப்படுவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இது நான்காவது முறை. 2009 மற்றும் 2010 ஆண்டுகளில், டோனி  டெஸ்ட் அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐசிசி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், மிஸ்பா உல் ஹக், இந்திய வீரர்கள் ஷிகர் தவண், ரவீந்திர ஜடேஜா, இலங்கையின் குமார் சங்ககாரா ஆகியோரின் பெயர்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், குக், ஹஷிம் ஆம்லா, ஜேம்ஸ் ஆண்டர்ஸன், மைக்கேல் கிளார்க், சென்ற வருடம் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்ற வீரர் குமார் சங்கக்காரா ஆகியோரும் இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆம்லா, ஆண்டர்ஸன் மற்றும் கிளார்க், இந்த ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஐசிசி வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு டிரென்ட் போல்ட் (நியூஸிலாந்து), சேதேஷ்வர் புஜாரா (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
ஐசிசி சிறந்த டி20 போட்டி வீரர் விருதுக்கு உமர் குல் (பாகிஸ்தான்), மார்ட்டின் கப்டில் (நியூஸிலாந்து), பிரென்டன் மெக்கல்லம் (நியூஸிலாந்து), அஜந்தா மென்டிஸ் (இலங்கை) ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட பட்டியலில் ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒருவருக்கு விருது வழங்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 14-ம் திகதி வெளியாகும்.

ஒரு நாள் அணி - வீரர்கள் பட்டியல்

ஒருநாள் அணி விவரம்: எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), திலகரத்னே தில்ஷான் (இலங்கை), ஷிகர் தவண் (இந்தியா), ஹசிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா), குமார் சங்ககாரா (இலங்கை), ஏ.பி.டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்), மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), லசித் மலிங்கா (இலங்கை), 12-வது வீரர்: மிட்செல் மெக்லீனாகான் (நியூஸிலாந்து).

டெஸ் அணி - வீரர்கள் பட்டியல்

அலாஸ்டர் குக் (கேப்டன்), சேதேஷ்வர் புஜாரா (இந்தியா), ஹசிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா), மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா), மைக்கேல் ஹசி (அவுஸ்திரேலியா), டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா), எம்.எஸ்.டோனி  (விக்கெட் கீப்பர், இந்தியா), கிரீம் ஸ்வான் (இங்கிலாந்து), டேல் ஸ்டெயின் (தென் ஆப்பிரிக்கா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), வெர்னான் பிலாண்டர் (தென் ஆப்பிரிக்கா), 12-வது வீரர்: அஸ்வின் (இந்தியா).

0 comments:

Post a Comment