சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, December 4, 2013

பெல்ஜியத்தில் கோர விபத்து: ஒருவர் பலி - பலர் படுகாயம்

By on 7:44 AM
பெல்ஜியத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் ஒரே இடத்தில் கார்கள், டிரக்குகள் ஆகிய 100 வாகனங்கள் ஒரே இடத்தில் பயங்கரமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் உடல்நசுங்கி ஸ்தலத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மீட்புப்பணிகள் ஹெலிகாப்டர் உதவியுடன் நடந்து வருகின்றன.

மேற்கு பெல்ஜியம் பகுதியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த பகுதியின் கவர்னர் மீட்புப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.

காயம் அடைந்த 54 பேர்களில் 11 பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், 38 பேர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக்வும், 5 பேர்களுக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்த புகைபடங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் கடந்த 1996 ஆம் ஆண்டு இதேபோல 100 வாகனங்கள் இந்த பகுதியில் மோதி 10 பேர் வரை பலியாகியுள்ளனர். 

0 comments:

Post a Comment