நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலாவின் வாழ்க்கையின் மைல் கற்கள் பின்வருமாறு -
நிறவெறியை எதிர்த்து போராடிய தென் ஆப்பிரிக்காவின் முதல் தலைவர் மண்டேலா.
ஜுலை 18, 1918: தென் ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு டிரான்ஸ் கீ பகுதியில் ம்வெசோ என்ற கிராமத்தில் பிறந்தார்.
1925 : குனு கிராமத்தில் பள்ளி கல்வியை துவங்கிய அவர் தனது ஆசிரியரால் 'நெல்சன்' என பெயரிடப்பட்டார்.
1939 : மேற்கு அலைஸ் நகரத்தின் போர்ட் ஹேர் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
1940 : கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்த்து புறக்கணிப்பில் ஈடுபட்டதற்காக கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.
1941 : திருமண ஏற்பாட்டை நிராகரிக்கும் பொருட்டு ஜோகன்னஸ்பர்க் நகருக்கு தப்பி ஓடினார். அங்குள்ள சுரங்கத்தில் இரவு காவலராக பணியாற்றினார். பயிற்சி வழக்கறிஞராக விட்கின், சிடல்ஸ் கிரூய ஈடல்மேன் நிறுவனத்தில் சேர்ந்தார்.
1942 : தென் ஆப்பிரிக்க பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார்.
1943 : ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். முதுநிலை பட்டப்படிப்பிற்காக விட்வாட்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
1944 : ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இளைஞர் அணியை உருவாக்கினார். இவ்லின் மேசை திருமணம் செய்தார். அவருடனான வாழ்க்கையில் நான்கு குழந்தைகளை பெற்றார்.
1951 : ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இளைஞர் அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1952 : சட்டமீறல்களில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு 9 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முதல் கறுப்பின சட்ட மையத்தை துவக்கினார். ஆப்பிரிக்க தெசிய காங்கிரசின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1956 : தேசதுரோக குற்றச்சாட்டில் 155 பேருடன் கைது செய்யப்பட்டு பின் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
1958 : தனது மனைவி இவ்லின் மேசை விவாகரத்து செய்தார். நொம்சாம்சோ வின்னி மடிக்கிசெலாவை திருமண செய்தார். அவருடனான வாழ்க்கையில் 2 மகள்களை பெற்றார்.
1960 : வெள்ளை இனவெறி அரசால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரசும் தடை செய்யப்பட்டது.
1961 : நிழல் உலகத்துக்கு சென்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் ராணுவ பிரிவை உருவாக்குவதற்கு உதவி செய்தார். அதன் முதற்பெரும் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1962 : ராணுவ பயிற்சிக்காக நாட்டை விட்டு வெளியேறினார். திரும்பும்போது கைது செய்யப்பட்டார்.
1963 : தவறான வழியில் நாட்டை விட்டு வெளியேறியதற்காகவும், குழப்பம் விளைவித்ததாகவும் கூறி கைது செய்யப்பட்டார். ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார். நாசவேலையில் ஈடுபட்டதாகவும் பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
1964 : வழக்கு நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டைக்கு உள்ளானார். கேப் டவுன் கடற்கரையில் உள்ள ராபென் தீவு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
1982 : ராபென் தீவு சிறைச்சாலையில் இருந்து போல்ஸ்மூர் சிறைக்கு மாற்றப்பட்டார். வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்று உறுதியளித்தால் விடுதலை செய்ய தயார் என்ற அதிபர் பி. டபிள்யு. போத்தாவின் கூற்றை நிராகரித்தார்.
1988 : காசநோயால் பாதிக்கப்பட்டார். கேப்டன் டவுன் நகருக்கு வெளியே உள்ள விக்டர் விஸ்டர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
பெப், 11. 1990 : 27 வருட தண்டனைக்கு பின் சிறையிலிருந்து விடுதலையானார்.
1990 : ஆப்பிரிக்க தேசிய காங்கரசின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991 : ஆப்பிரிக்க தேசிய காங்கரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1993 : அதிபர் எப்.டபிள்யு. டி கிளார்க் அமைதிக்கான நோபெல் பரிசை மண்டேலாவிற்கு வழங்கினார்.
ஏப்ரல் 27இ 1994 : தென் ஆப்பிரிக்காவின் முதல் குடியரசு தேர்தலில் முதல் முறையாக வாக்களித்தார்.
மே 10இ 1994 : அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996 : வின்னி மண்டேலாவை விவாகரத்து செய்தார்.
1998 : தனது 80-வது பிறந்த நாளில் க்ராகா மேச்சலை திருமணம் செய்துகொண்டார்.
1999 : அதிபராக ஒருமுறை மட்டுமே இருக்கவேண்டும் என முடிவெடுத்து தனது பதவியிலிருந்து விலகினார்.
2002 : புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
2002 : எய்ட்ஸ் நோயை எதிர்த்து உலகளாவிய பிரச்சாத்தில் ஈடுபட்டார்.
2004 : பொது வாழக்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
2005 : தனது மூத்த மகன் மக்காத்தோ 'எய்ட்ஸ்' தொடர்பான வியாதியால் மரணமடைந்ததாக தெரிவித்தார்.
2008 : தனது 90வ-து பிறந்த நாளை கொண்டாடினார்.
2010 : ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் சாக்சர் போட்டியில் பொது மக்களுக்கு காட்சியளித்தார்.
2011 : கடுமையான சுவாச தொற்று நோய் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 2 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்.
பெப். 2012 : வயிற்றுவலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
டிச. 2012 : நுரையீரல் பாதிப்படைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து பித்தப்பையிலிருந்து கற்கள் அகற்றப்பட்டு 19 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்.
மார்ச். 2013 : நிமோனியா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 10 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்.
ஜுன் 8, 2013 : நுரையீரல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
0 comments:
Post a Comment