மாரஸ்ஸன உடுதெனிய பிரதேசத்தில் 13 வருடகாலமாக மிகவும் சிறப்பாக இயங்கி வரும் அல் - இஸ்லாம் பாலர் பாடசாலையின் மாணவர்களின் விளையாட்டு போட்டியும் , பரிசளிப்பு விழாவும் அதன் ஆசிரியர் மஹ்ருன் நிஸா அவர்களின் தலைமையில் 2013-12-10ம் திகதி புதன் கிழமை வெகு விமர்சியாக நடைப்பெற்றது.
இவ் விழாவிழாவில் பாடசாலை அதிபர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் கிராம சேவக உத்தியோகஸ்தர்கள், தலாதுஓய பொலிஸ் நிலை அதிகாரி, உடுதெனிய பள்ளிவாயல் நிறைவேற்றுசபை உறுப்பினர்கள், பள்ளிவாயல் பேஸ் இமாம் மற்றும் பெற்றோர்கள், நலன்விரும்பிகள், என பலர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிகள் யாவும் மிகவும் சிறப்பாக வடி வமைக்கப்பட்டிருந்தன. விளையாட்டு போட்டி நிகழச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும், மக்களின் கவனத்தை ஈர்த்தன. வினோத உடை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. காலை 10.00 முதல் மாலை 4.00 வரை இந் நிகழ்ச்சிகளை ஆர்.எம். ரிஸ்வான் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
(தெல்தோட்டை வொய்ஸ் உடுதெனிய செய்தியாளர்)



0 comments:
Post a Comment