சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, December 12, 2013

ஹங்குரான் கெத்த பிரதேச சபை வரவு செலவுத் திட்டமும் தோல்வி

By on 1:04 AM


2014க்கான ஹங்குரான்கெத்த பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. 


இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 8 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. 


இதேவேளை ஹங்குராங்கொத்த பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


எது எவ்வாறு இருப்பினும் இம் முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்ட மதவாச்சி, வத்தளை, இபுல்பே, அளவ்வை, ராஜங்கனைய, மீரிகம, கிண்ணியா, ஹங்குரான்கெத்த பிரதேச சபைகள் மற்றும் கெஸ்பேவ, பேலியகொடை, எம்பிலிபிடிய நகரசபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. 


மேலும் 2012 திருத்தியமைக்கப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின்படி இரண்டாம் முறை வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தால் சபையில் தலைவர் பதவி விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


(நன்றி -  அத தெரண தமிழ்)

0 comments:

Post a Comment