சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, January 3, 2014

MIIHA நிர்வனத்தின் மற்றுமொரு சமூகப்பணி அல்- ஹிக்மாவில்

By on 4:23 AM

MIIHA நிர்வனம் ஏற்பாடு செய்த இரு கரங்களை இணைக்கும் நிகழ்ச்சி திட்டம் இம்முறை தெல்தோட்டை அல்-ஹிக்மா மு.ம.வி இல் நடைபெற்றது.



கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளின் உதவிகளை பெற்று அதனை பின்தங்கிய வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பிள்ளைகளை இனங்கண்டு அவர்களுக்கு ஒப்படைக்கும் ஓர் உன்னத செயற்திட்டமே கடந்த 02 ஆம் திகதி தெல்தோட்டை அல்-ஹிக்மா மு.ம.வி. இடம்பெற்றது.



கொள்ளுபிடியில் அமைந்துள்ள WINSYS NETWORKS என்ற நிர்வனத்தின் பூரண அனுசரனையுடனே இந்நிகழ்ச்சி திட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


அல்-ஹிக்மா மு.ம.வி அதிபர் எஸ்.எம்.ஆபிதா அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக WINSYS NETWORKS Pvt Ltd  நிர்வனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.சியாம் ஆப்தீன் கலந்து கொண்டார்.



0 comments:

Post a Comment