முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் தனியார் காணி அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளபடுவதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் ஆறாவது அமர்வு இன்று (18) காலை கைதடியில் உள்ள வடமாகாண சபை பேரவை கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த அமர்வில் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான பிரேரணையை முன் வைத்து உரையாற்றும் போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் அரசாங்கத்தால் திட்டமிட்டு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேலான தனியார் காணி அபகரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அபகரிக்கபட்டு குடியேற்றப்பட்ட இடங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அங்கு துரித கெதியில் அபிவிருத்தியும் நடைபெறுகின்றன.
மணலாறு என இருந்த தமிழர் பிரதேசம் இன்று வெலிஓயா என பெயர் மாற்றப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு தான் கிழக்கில் 4 வீதமாக இருந்த சிங்கள மக்கள் இன்று 24 வீதமாக காணப்படுகின்றனர்.
அதேபோலத்தான் வடக்கிலும் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதன் மூலம் சனத்தொகை பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் விரும்புகின்றது என மேலும் தெரிவித்தார்.
இன்றைய ஆறாவது அமர்வில் உறுப்பினர்களால் 29 பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
அடுத்த அமர்வினை எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதி வரை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஒத்திவைத்துள்ளார்.

0 comments:
Post a Comment