இலங்கை சார்பில் அதிக சதங்களை பெற்ற வீரர் என்ற பெருமையை சங்கக்கார தனதாக்கி கொண்டார். பங்களாதேஷ் அணியுடனான போட்டியின் போதே அவர் இந்த சாதணையை படைத்தார்.
அந்த போட்டியின் போது இன்னும் 32 ஓட்டங்களை சங்கா பெற்றிருப்பார் எனின் டெஸ்ட் கிரிக்கட் போட்டி ஒன்றில் அதிக ஓட்டம் பெற்ற வீரர் என்ற சாதணையை படைத்திருப்பார்.
தற்போது அந்த சாதணைக்கு சொந்தக்காரர் இங்கிலாந்து அணியின் முன்னைய நாள் தலைவர் கிரேஹெம் கூச் ஆவார்.
அவர் 1990 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக லோட்ஸ் மைதானத்தில் முதல் இனிங்சில் 333 ஓட்டங்களும், இரண்டாம் இனிங்சில் 123 ஓட்டங்களையும் குவித்து மொத்தமாக 456 ஓட்டங்களை குவித்தார்.
எனினும் சங்கா இரண்டாம் இனிங்சில் பெற்ற 105 ஓட்டங்களுடன் மொத்தமாக குறித்த போட்டியில் 424 ஓட்டங்களையே பெற்றார்.
0 comments:
Post a Comment