சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, February 28, 2014

சிங்களம் மற்றும் தமிழ் இரு தேசிய மொழிகளை கொண்ட அடையாள அட்டை விநியோகம் ஆரம்பம்

By on 7:49 PM

சிங்களம் மற்றும் தமிழ் இரு தேசிய மொழிகளை கொண்ட அடையாள அட்டை விநியோகம் நேற்றுமுதல் ஆரம்பம்.

தேசிய அடையாள அட்டைகளில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு தேசிய மொழிகளை உள்ளடக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் நேற்று விநியோகிக்கப்பட்டன.

கொழும்பு ஜாவத்தையில் அமைந்துள்ள இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தில் இரு மொழிகளில் விபரங்கள் எழுதப்பட்ட அடையாள அட்டைகள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டன.

முதல் அடையாள அட்டை திணைக்களத்தில் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வரும் பெண்ணொருவருக்கு வழங்கப்பட்டது.

இந்த வைபவத்தில் இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத் குமார உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment