சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, February 20, 2014

இவர் யார் என்று தெரிகிறதா?

By on 8:35 AM

முஹம்மட் அஷ்ரபுல்...  பங்களாதேஷ் அணி முதன்முதலாக வெற்றியை சுவைக்க காரணமாக இருந்த ஒரு அற்புத விளையாட்டு வீரர். தலைமைப்பதவியில் இருந்து பங்களாதேஷ் அணியை சிறப்பாக வழிநடத்திய ஒருவர்.

இதுவரையில் 61டெஸ்ட் போட்டிகளில் 2737 ஓட்டங்களையும் 21 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

ஒருநாள் போட்டிகள் 177ல் விளையாடி 3468 ஓட்டங்களும் 18 விக்கெட்டுகளும்.

23 இருபதுக்கு இருபது போட்டிகளில் 450 ஓட்டங்களும் 8 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ள இவர், தனது மோசமான ஊழல் குற்றச்சாட்டில் அகப்பட்டு பகிரங்கமாக நாட்டு மக்களிடம் மன்னிப்புகோரி அணியிலிருந்து தூக்கி வீசப்பட்டவர்.

இன்று, கூட்டத்துடன் கூட்டமாக சேர்ந்து போட்டியை பார்த்துக்கொண்டிருக்கிறார் யாருக்குமே அடையாளம் தெரியாமல்.

‎வாழ்க்கை‬ ஒரு வட்டம் புரோ.. இங்க தோற்கிறவன் ஜெயிப்பான் ஜெயிக்கிறவன் தோற்பான்

0 comments:

Post a Comment