சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Saturday, February 22, 2014

கடாரில் நடந்த தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழையமாணவர்களின் ஒன்று கூடல்

By on 11:16 PM
      கடார் நாடடுக்கு தொழில் நிமித்தம் சென்று அங்கு வசித்து வரும் தெல்தோட்டை பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் 2014-02-14ம் திகதி கடார் நகரில் இடம்பெற்றது.
இதன்போது சுமார் 20 பழையமாணவர்கள் கலந்துகொண்டனர் மாஷா அல்லாஹ்! அவர்களது ஒன்றுகூடலின் நோக்கம் தான் படித்த தனது கல்லூரிக்காக தங்களால் இயன்ற பணிகளை முன்வந்து செய்வதினூடாக கல்லூரியின் வளர்ச்சியில் தாமும் பங்கெடுக்க வேண்டும் என்பதே. 
அந்தவகையில் அதன் முதற்கட்ட ஏற்பாடாக இக்கூட்டத்தில் போது கல்வி நடவடிக்கை கூடுதலான கவனம் செலுத்துவதற்கான தீர்மானங்கள் பெறப்பட்டதோடு உறுப்பினர்களின் தெரிவு இடம்பெற்றது.

        இன்ஷா அல்லாஹ் இது போன்ற முயற்சிகளை எதிர்காலங்களில் ஏனைய பாடசாலை பழையமாணவர்களும் முன்வந்து சிறந்த பணிகளை முன்னெடுப்பார்கலெனில் எதிர்காலங்களில் தெல்தோட்டை பகுதியிலே கல்வியிலே பாரிய முன்னெடுப்புக்களை செயற்படுத்த முடியும் என்பதில் ஐயமில்லை. 
    எனவே, இந்த முயற்சியில் முன்னின்று உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் தனது நேரத்தை ஒதுக்கி இந்நிகழ்வில் பங்குகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அல்லாஹ் அவர்களது உழைப்பில் பரகத் செய்ய பிராத்திக்கின்றோம். 
ஆர்.எம். ரிஸ்வான்

0 comments:

Post a Comment