ஆப்பிரிக்காவில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு CAR நாட்டில் பெரும்பான்மை கிறிஸ்த ஆயுத குழுக்களினால் , சிறுபான்மை முஸ்லிம்கள் மிகவும் பயங்கரமான முறையில் இன அழிப்பு செய்யப்பட்டு வருவதாக சர்வதேச அமைப்புக்கள் தெரிவித்துள்ளது .
படுகொலைகள் திட்டமிடப் பட்ட இனச் சுத்திகரிப்ப்பாக , இன அழிப்பாக மாறியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளதுடன் உடனடியாக சர்வதேச சமூகம் இந்த இனச் சுத்திகரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன .
முஸ்லிம்கள் வீதிகளில் வெட்டியும் ,கொத்தியும் படுகொலை செய்யப்படுவதுடன் உயிருடன் எரிக்கப் படும் பயங்கரமான படுகொலைகளும் பரவலாக இடம்பெற்று வருகிறது . முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகும் கிறித்தவ இராணுவம் அங்குள்ளவர்களை படுகொலை செய்வதுடன் வீடுகளையும் தீயிட்டு அழித்து வருகிறது . ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் நாட்டி விட்டு விரட்டப் பட்டு வருகின்றனர் என அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன .
கடந்த வாரம் சர்வதேச மன்னிப்பு சபை விடுத்திருந்த அறிக்கையில் Anti-Balaka fighters (கிறித்தவ பயங்கரவாத ஆயுத குழு ) முஸ்லிம்களை இன சுத்திகரிப்புக்கு உட்படுத்த முயன்று வருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
ஆபிரிக்க புத்தஜீவிகள் அமைப்பு ( The Union of African Scholars) விடுத்துள்ள அறிவிப்பில் உடனடியாக இடம்பெறும் இனச் சுத்திகரிப்பை சர்வதேச சமூகம் தடுத்த நிறுத்த வேண்டும் , நடுநிலையான படையை அங்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வித்துள்ளதுடன் பிரான்ஸ் இராணுவம் படுகொலைகள் இடம்பெறும்போது கிறித்தவ ஆயுதக் குழுக்களுக்கு சார்பான நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளது .
-அதேவேளை முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியம்( IUMS-“The International Union for Muslim Scholars) விடுத்துள்ள அறிக்கையில் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் முஸ்லிம்கள் மீதான இனச் சுத்திகரிப்பை உலகம் உடனடியாக தடுத்த நிறுத்தவேண்டும் என கோரியுள்ளதுடன் ஐநாஇ மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் கூட்டமைப்பு ( The Organization of Islamic Cooperation (OIC)) அடங்கலாக சர்வதேச அமைப்புக்களிடமும் இனச் சுத்திகரிப்பை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளதுடன் மத்திய ஆப்பிரிக்க குடியரசு முஸ்லிம்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குமாறும் சர்வதேச தொண்டு நிறுவங்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது .
50 வீதம் பெரும்பான்மையாக கிறிஸ்தவர்களை கொண்ட நாட்டில் 15 வீதம் முஸ்லிகள் வாழந்து வருகின்றனர் இந்த வன்முறைக்கு Anti-Balaka என்ற பெரும்பான்மை கிறிஸ்தவ பயங்கரவாத இயக்கம் பிரதான காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

0 comments:
Post a Comment