நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டின் நீதித்துறையை இரகசியமாக முஸ்லிமயப்படுதுவற்கு சதி செய்வதாக ஜாதிக்க ஹெல உருமய தெரிவித்துள்ளது . ஜாதிக்க ஹெல உருமயவின் ஊடக செயலாளரும் மேல மாகாண சபை தேர்தல் வேட்பாளருமான நிசாந்த இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் மேற்படி குற்றம் சாட்டப் பட்டுள்ளது .
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , நீதி அமைச்சின் கீழ் வரும் துறைகளில் முஸ்லிம்கள் அதிகாமாக உள்வாங்கப் படுவதாகவும் , நீதியமைச்சுக்கு பதவிகள் வழங்க்கப் படும்போதும் , சட்டக் கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குவதிலும் , சமாதான நீதவான்கள் நியமிப்பதிலும் இது இடம்பெறுவதாகவும் சிங்கள்வர்களுக்கு அநீதி இழைக்கப் படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது .
இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment