சிரியாவின் உள்நாட்டுப் போரினால் சுமார் 55 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியமான 'யூனிசெஃப்' கவலை தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்காகி விட்டதாக குறிப்பிட்டுள்ள நிதியத்தின் செயல் இயக்குனர் அந்தோணி லேக்ஸ், உணவைத் தேடி இந்த குழந்தைகள் அலைவதும், குப்பைகளுக்கு நடுவே உறங்குவதும் மனதை பிழிவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
அடிப்படை தேவையான கல்வி மற்றும் மருத்துவத்துக்கு கூட இந்த குழந்தைகள் திண்டாடுவது இன்னும் ஓராண்டுக்கு நீடிக்கத் தான் வேண்டுமா? எனவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
சிரியாவில் உள்ள 55 லட்சம் குழந்தைகளுடன் அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ள சுமார் 18 லட்சம் குழந்தைகள் சுத்தமான குடிநீர் மற்றும் சத்தான உணவு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
இவர்களில் பத்தில் ஒரு குழந்தை வேலை செய்து தனது பசியை தீர்த்துக் கொள்ள வேண்டியிருப்பது துக்ககரமானது என்றும் அந்தோணி லேக்ஸ் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment