சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, March 13, 2014

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பெளத்த மதத்தின் எதிரியாம்: BBS

By on 9:34 PM

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க பெளத்த மதத்தின் எதிரி. வீடுகளில் இயங்கும் தொழுகை நிலையங்கள் அதிகரிப்பை கட்டுப் படுத்த தவறினால் நாம் ஆயுதம் தரித்து அவற்றை நாட்டில் இருந்து சுத்தப் படுத்துவோம் என்று பொதுபல சேனா தெரிவித்துள்ளது .

மேலும் அந்த அமைப்பு , சந்திரிக்கா பண்டாரநாயக்க சர்வதேச மட்டத்தில் பெளத்த சிங்களவர்களை தனிமைப் படுத்த செயல்பட்டு வருகிறார் அவர்  அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணத்தை பெற்று வெளியில் இறங்கியுள்ளார். எனவும் பொதுபல சேனா தெரிவித்துள்ளது

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் உண்மையான செயற்பாடுகளை  வெளியிடப் போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கையில், சந்திரிக்கா அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணத்தை பெற்று வெளியில் இறங்கியுள்ளார். விசேட ஊடக சந்திப்பை நடத்தி உண்மைகளை நாம் வெளியிடுவோம்.

சந்திரிக்காவினால் முன்னர் செய்ய முடியாததை தற்போது செய்ய முனைவது பற்றி நாம் கூறுவோம்.அதேபோல் ஹக்கீமின் விடயங்கள் பற்றியும் நாம் வெளியிடுவோம். ஜெனிவா போன்ற பிரச்சினைகள் காரணமாக நாங்கள் வாயை மூடிக் கொண்டிருக்கின்றோம்.

முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான நிறுவனம் ஒன்று இலங்கையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெளத்த மதத்தின் மீது தாக்குதல்கள் நடாத்தப் பட்டுள்ளது புல்டோசர் போட்டு பெளத்த மத சின்னங்கள் உடைக்கப் பட்டது , தலதா மாளிகை தாக்கப்படும்போது சந்திரிகா எங்கு இருந்தார் எனவும் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment