இலங்கை சிறையில் இருக்கும் அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.
இத்தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா நேற்று (27) சமர்பித்த பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்கவில்லை என்பதோடு அதற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதுடன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது என்பது சட்ட ரீதியாக நடைபெறுவதொன்றாகும். அவர்களை தடுத்து வைத்தல், விடுதலை செய்வது என்பது சட்ட ரீதியாகவே நடைபெறும் என கடற்றொழில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை தேவைப்படுவது எமக்கல்ல தமிழக மீனவர்களுக்குத் தான். இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை இனிமேலும் தேவை என்றால் அதற்கான திகதியை அவர்களே தீர்மானித்து வரவேண்டும். நிபந்தனைகளை இனிமேலும் ஏற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
இது இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை. அதனை நடத்துவது அல்லது நடத்தாமல் விடுவதும் அவர்கள் தீர்மானிக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அமைச்சு முழுமையான ஒத்துழைப்பை வழங்குகிறது.
எவ்வாறாயினும் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் எவராயினும் அவர்களை கைது செய்யுமாறு கடற்படைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறி இரண்டு தடவைகளும் தமிழகமே ஏமாற்றியுள்ளது. அவர்கள் இனிமேல் பேச்சுவார்த்தைக்கு வர விரும்பினால் திகதியை அவர்களே முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
இதேவேளை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மீண்டும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலேயே இலங்கையில் பேச்சுவார்த்தை என இந்திய பிரதமருக்கும் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

0 comments:
Post a Comment