சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, March 30, 2014

மக்களின் விருப்பு நடிகைகளுக்கு இல்லை!

By on 8:07 PM

தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட பிரபல நடிகைகள் தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது.

அனார்கலி ஆகர்ஷா ஆளும் கட்சியின் சார்பிலும் நதீஷா ஹேமமாலி ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டனர்.

மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட அனார்கலி ஆகர்ஷா 8842 விருப்பு வாக்குகளை பெற்று 18வது இடத்தைப் பெற்றுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கு 10 ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இதேவேளை மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட நதீஷா ஹேமமாலி 11,006 விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

0 comments:

Post a Comment