சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, March 18, 2014

எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் துரித அபிவிருத்தியில் நீங்களும் பங்காளிகள் ஆகலாம்

By on 8:48 PM
எழில் கொஞ்சும் மலையகத்தில் ஒளி வீசும் பாடசாலையாக க / எனசல் கொல்ல ம.க திகழ்கிறது. சுமார் 1200 மாணவர்களை கொண்ட இக்கல்லூரியில் 90% ஆன மாணவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் வாழ்பவர்கள் ஆவர்.

வருடந்தோறும் க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) பிரிவுகளில் சாதனை பெறுபேறுகளை வெளிக்காட்டி வருகிறது. 



இந்த நிலையிலேயே இந்த பாடசாலை 1000 துரித அபிவிருத்தி பாடசாலைகளுக்குள் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

எனினும், இப்பாடசாலை அமையப் பெற்றுள்ள புவியியல் அமைப்பானது அதன் துரித அபிவிருத்திக்கு தடையாக அமைந்து வருகிறது. 



இரண்டு மாடிகளைக் கொண்ட விஞ்ஞான ஆய்வு கூடம் ஒன்றை அமைக்க 1000 துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை அமைக்கும் போது அதனை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக பணம் தேவைப்படுகிறது. காரணம் பாடசாலை அமையப் பெற்றுள்ள புவியியல் அமைப்பாகும். அதனை கட்டும் போது பாரிய மதில் ஒன்றை கட்டுவதன் தேவை ஏற்படுகிறது. 



எனவே இதற்கான பண வசதியினை திரட்டிக் கொள்வதில் பாடசாலை நிர்வாகம் அளப்பெரிய சவாலை எதிர் நோக்கி வருகிறது.

எனவே பெரும் மனம் படைத்த கனவான்களே, மாணவர்களின் எதிர் கால முன்னேற்றத்துக்கு நீங்களும் கை கொடுங்கள்.

(பாடசாலை அதிபர், ஆசிரியர், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம்)


0 comments:

Post a Comment