இலங்கையர்களுக்கு ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பு வழங்குதல், ஆப்கானிஸ்தான் தாதியருக்கு இலங்கையில் பயிற்சி வழங்குதல் என்பன தொடர்பில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன.
நேற்று இலங்கை வந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதிக்கு இன்று ஜனாதிபதி செயலகத்தில் செங்கம்பள வரவேற்பும் இராணு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டன.
இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் தனித் தனியாகவும் குழு நிலையிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இங்கு கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி, இலங்கையில் சமாதானத்தை உருவாக்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
உலகம் என்ன சொன்னாலும் ஒரு நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சிறந்த பொறிமுறை சமாதானத்தை உருவாக்குவதேயாகும் என்றார்.
மனித உரிமைகளின் முதல் எதிரி யுத்தமாகும். மனித உரிமைகளைக் காக்கவும் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தவும் சமாதானம் மிகவும் அவசியம். அதனை நாம் இலங்கையில் கண்டுகொண்டோம். அதற்காக உங்களை பாராட்டுகிறோம் என்றும் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், எமது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகயைில் உங்களின் விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஆப்கானிஸ்தானின் நெருக்கடியான கால கட்டத்தில் அந்நாட்டுக்கு தலைமை தாங்குவது உங்களின் திறமையைக் காட்டுகின்றது. ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை நிலைநாட்ட நீங்கள் மேற்கொண்டுவரும் முயற்சியை பாராட்டுகிறேன் என்றும் தெரிவித்தார்.
இரு நாட்டுத் தூதுக்குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கல்வித்துறை ஒத்துழைப்பு, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஆப்கானிஸ்தான் மாணவர்களை அனுமதித்தல், ஆப்கான் கிரிக்கெட் வீரர்களுகக்கு இலங்கையில் பயிற்சி வழங்குதல் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.






0 comments:
Post a Comment