சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, March 5, 2014

ரவூப் ஹக்கீமிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!– ஹெல உறுமய

By on 2:15 AM

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் ஹக்கீம் நாட்டுக்கு எதிராக செயற்பட்டுள்ளார் என கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டிற்கு இலங்கைக்கு எதிரான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. முஸ்லிம்களின் மதச் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஜாதிக ஹெல உறுமய, பொதுபல சேனா, ராவணா பலய போன்ற அமைப்புக்கள் பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் முஸ்லிம் காங்கிரஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நீதி அமைச்சர் பதவியை வகித்துக்கொண்டே அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவது வெட்கம் கெட்ட செயலாகும். முஸ்லிம் மக்களை விரட்டிய தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனும் ஹக்கீம் 2002ம் ஆண்டில் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.என்றும் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment