சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, April 2, 2014

5ஆவது உலக இருபது-20 தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைவது யார்?

By on 8:54 PM
 
ஐ.சி.சி யின் 5 ஆவது இருபது - 20 கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்குள் முதலாவதாக நுழைவது யார்? என்பதை தீர்மானிக்கும் தீர்க்கமான அரையிறுதியில் இன்று இலங்கை அணியும் நடப்பு சம்பியன் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

கடந்த 4 ஆவது உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் கிண்ணத்துக்காக மோதிய இவ்விரு அணிகளும் இம்முறை இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்காக போராடவுள்ளமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளும் இதுவரையில் 5 இருபது- 20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இலங்கை அணி 4 போட்டிகளிலும், மே.இந்திய அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

0 comments:

Post a Comment