சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, April 16, 2014

எமது கொழும்பு அலுவலக திறப்பு மேயர் முஸம்மில் கலந்து கொண்டாரே : BBS

By on 8:04 PM

கொழும்பு பொது பல சேனாவின் அலுவலக திறப்பு விழா நிகழ்வில்  கொழும்பு மேயர் முஸம்மில்: இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே கருத்து

வெளியிடுகையில், பொதுபல சேனா அமைப்பின் மீது பயங்கரவாத முத்திரையை குத்த வேண்டும் என்பது பௌத்த விரோதிகளின் கனவாகும்.

கடந்த காலங்களில் எமது அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் எமது அமைப்பை சர்வதேச அமைப்பொன்று பயங்கரவாத அமைப்பாக அறிந்ததையிட்டு சுய மகிழச்சியடைந்துள்ளனர். எமது காலி அலுவலகத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கலந்து கொண்டதன் காரணமாகவே எமது அமைப்புக்கு அவரது ஆதரவு இருப்பதாக கூறுகின்றனர்.

அதேவேளை கொழும்பு பொது பல சேனாவின் அலுவலக திறப்பு விழா நிகழ்வில்  கொழும்பு மேயர் முஸம்மில் கலந்து கொண்டார் என்பது  குறிப்பிடத்தக்கது. எமது அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமைப்பு, ஏற்கனவே ஜே.வி.பி, கம்யூனிஸ்ட் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றையும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்திருந்தது. இதனடிப்படையில் மகிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் பயங்கரவாதிகளாக இருக்க வேண்டும் எனவும் டிலாந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment