சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, April 28, 2014

சிறப்பு பொலிஸ் பிரிவு அரச ஆதரவு இல்லாமல் வெற்றி பெறாது

By on 4:59 AM

பெதுபல சேனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரியளவில் நாடு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் இதனை தடுக்க முடியாது எனஅமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் பொதுபல சேனா இயக்கம் செயற்பட்டு வருவதாகவும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் பொதுபல சேனா புரிந்து கொண்டால் இவ்வாறான குழப்பங்களை விளைவிக்காது என அவர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவின் நடவடிக்கைகளினால் எதிர்வரும் செப்படம்பர்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளிலும் இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத விவகாரங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு தனியான காவல்துறை பிரிவு அமைப்பதன் மூலம் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுபல சேனாவிற்கு உயர்மட்ட ஆதரவு காணப்படுவதாகவும், காவல்துறையினரை அவர்கள் மதிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா இயக்கம் ஏனைய சிறுபான்மை இன சமூகங்களை துன்புறுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment