சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, April 27, 2014

சொந்த காணிகளை இழந்த மக்களுக்கு புதிய காணிகள் கிடைக்குமா?

By on 9:34 PM

வில்பத்து தேசிய பூங்காவுக்குட்பட்ட சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் குடியேறியுள்ள 73 குடும்பங்களையும் குடியமர்த்துவதற்காக பூங்காவிற்கு புறம்பாக வெளியே 50 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அங்கு அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் மன்னார் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இருவார காலப் பகுதிக்குள் இந்தக் காணிகளை பிரித்து கொடுத்து காணிகளை சுத்திகரித்து கொடுக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து குடியமர்த்தப்படவுள்ள குடும்பங்களுக்கு நாட்டின் ஏதேனும் பகுதிகளில் அரசாங்கத்தினால் இலவசமாக காணிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பது  பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னரே அவர்களுக்குரிய காணிகள் ஒப்படைக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முதலில் காணிகளில் மீள் குடியேறுவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படுமெனவும் பின்னர் அவர்கள் தமக்குரிய வீடுகளை கட்டுவதற்கான சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுமெனவும் மன்னார் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை இது குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இம் மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துவதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும், இல்லை என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment