பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா இன்று கிராண்ட் பாஸ் மஸ்ஜித் விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை செயல்படுத்த தவறியதற்காக புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் மீது விசனம் தெரிவித்துள்ளார் .
புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடுமையான வார்த்தைகளை கொண்ட ஒரு கடிதத்தில், பொது நிர்வாக அதிகாரிகளின் செயலற்ற தன்மை பொதுமக்களுக்கு பிழையான சமிக்கையை கொண்டுசெல்லும் என தெரிவித்துள்ளார் .
பொது நிர்வாக அதிகாரிகள் பொது பிரச்சினைகள் மீது கூடிய கவனம் செலுத்த வேண்டும் உரிய நேரத்தில் அவை தீர்க்கப்படவில்லை என்றால், கடுமையான விளைவுகள் ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பு கிராண்ட்பாஸ் மோளவத்தை தீனுல் இஸ்லாம் மஸ்ஜித் பெளத்த தீவிரவாதிகளினால் மூர்க்கமான முறையில் பொலிசார் பார்த்திருக்க தாக்கப்பட்ட பின்னர் சம்பவம் தொடர்பில்முஸ்லிம் மற்றும் பௌத்த தரப்பினருக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில் தீர்வுகளாக முன்வைக்கப் பட்டவை முஸ்லிம்களுக்கு சாதகமாக இல்லாத நிலையிலும் எதோ ஒருவகையில் உடன்பாடு எட்டப்பட்டது .
பிரதமர் டி.எம். ஜயரத்ன, தலைமையில் அந்த உயர்மட்டக் கூட்டம் நடாத்தப்பட்டது. பௌத்தசாசன கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதன் பின்னாரும் இது தொடர்பான கூட்டம் ஒன்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இடம்பெற்றது இவற்றில் எட்டப்பட்ட தீர்மானங்களில் குறித்த மஸ்ஜித் கைவிடப்பட்டது. பழைய மஸ்ஜித்துக்கு மேலாக வளர்த்திருந்த அரச மரம் வெட்டப்பட்டது ஆனால் முஸ்லிம்கள் சார்பாக எட்டப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானவை எதுவம் இதுவரை நிறைவேற்றப் படவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது, நாட்டில் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடக்கவில்லை , நாட்டில் மத முரண்பாடுகள் தொடர்பில் யாரும் அரசாங்கத்துடனான சந்திப்பின்போது கேள்வி எழுப்பவில்லை என பௌத்த சாசன பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன நேற்று முன்தினம் 20 பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 comments:
Post a Comment