கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன் பொது பல சேனாவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்புக் கோருமாறு அனுப்பிய கடிதத்திற்கு அவர் பதிலளிக்கவில்லை என தெரிவித்து, தனக்கு 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி அமைச்சர் ரிசாத் பதியூதீன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தனது சட்டத்தரணிகள் ஊடாக அமைச்சர் இந்த வழக்கினை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
கடும்போக்கு பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர், பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அமைச்சருக்கு எதிராக பொய்யான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
வில்பத்து தேசிய சரணாலயம் அழிவடைதற்கு அமைச்சர் காரணமாக இருந்தார் என்றும் வில்பத்து சரணாலயத்தில் 22 ஆயிரம் ஹெக்டேர் காணிகளை அழித்து, அதில் முஸ்லிம் அராபிய கொலனி ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு அமைச்சர் முயலுகின்றார் என்றும் .அமைச்சர் றிசாத் பதியுதீன் நீதிமன்றங்களை தாக்கி நிதித்துறை செயற்பாடுகளை தடுக்கும் ஒரு நபர் ஆவார் எனவும் குற்றசாட்டுக்களை முன்வைத்திருந்தார்
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் செயற்பாட்டில் பொதுபல சேனா செய்து வருகின்றது. பொய்யான பரப்புரையின் மூலம் மீண்டும் இன முறுகலை ஏற்படுத்த அவர்கள் முனைகின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment