சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, May 18, 2014

யாழ். நகரில் திடீரென இராணுவம் குவிப்பு - அங்கு மக்கள் பீதியில்

By on 2:28 AM
 
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் யாழ். குடாநாட்டில் அனுஸ்டிப்பதை தடுக்கும் நோக்குடன் குடாநாடு முழுவதும் துப்பாக்கிகளோடு இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு முதல் குடாநாட்டில் உள்ள ஆலயங்கள் தேவாலயங்களை சுற்றியும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

அதேவேளை போர்க்காலத்தில் நிலைகொண்டிருந்த இராணுவம் போல துப்பாக்கிகளோடும் சட்டி தொப்பிகளுடனும் பவல் கவச வாகனங்களுடனும் நல்லூர் ஆலயத்தின் முன்பாகவும் நிலை கொண்டுள்ளனர்.

வீதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் வீதியில் செல்லும் வாகனங்களின் இலக்கங்களும் பதியப்படுவதுடன் சிலர் மறிக்கப்பட்டு சோதனைக்கும் உட்படுத்தப்படுவதனால் குடா நாடு முழுவதும் பதட்டமான நிலை காணப்படுவதுடன் வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்படுகின்றது .

இதேவேளை யாழ். பல்கலைகழக சூழலை சுற்றி இராணுவத்தினரும் பொலிசாரும் மற்றும் சிவில் உடைதரித்தோரும் நேற்று இரவு நின்றமையின் காரணமாக பல்கலைகழக சூழலில் பதட்டமான நிலை நிலவியது.

யாழ். பரமேஸ்வரா சந்தி மற்றும் பொற்பதி சந்தியில் 20க்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் பொலிசாரும் நேற்று மாலை தொடக்கம் நின்றனர்.

அதேவேளை பல்கலைகழகத்தின் முன்னால் உள்ள இராமநாதன் வீதி, தொழினுட்பக்கல்லூரிக்கு முன்னால் உள்ள பிறவுண் வீதி, மற்றும் மற்றும் மருத்துவ பீடத்திற்கு முன்னால் ஆடியபாதம் வீதி ஆகியவற்றில் சிவில் உடை தரித்தோர் மோட்டார் சைக்கிள் நின்றனர்.

இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பது தொடர்பாக யாழ்.பல்கலைகழக ஆசிரியர் பீடம் மற்றும் மாணவர் ஒன்றியம் என்பன அறிக்கை விட்டிருக்கும் நிலையில் பல்கலைகழகத்தை சூழ இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த 16ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 20ம் திகதி வரை பல்கலைகழகம் மூடப்பட்டிருக்கும் என பதிவாளர் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment