சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, October 20, 2015

கடன் எல்லையை ரூ.400 பில்லியனால் அதிகரிக்க அனுமதி

By on 7:32 PM

திறைசேரி உண்டியல்களாக அரசாங்கத்திற்கு பெற முடியுமான கடன் தொகையை 400 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனைக்கு நேற்று பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த யோசனை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. 

இதன்படி திறைசேரி உண்டியல்களை வழங்குவதினூடாக அதிகபட்சமாக கடன் பெறுவதற்கென வரையறுக்கப்பட்டிருந்த 850 பில்லியன் ரூபா 1250 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

குறித்த யோசனை முன்னதாக 100 நாள் அரசாங்கம் இருந்த போது பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment