இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி ஒரு இனிங்ஸ் 06 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 484 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 186, தினேஷ; சந்திமால் 154 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பதிலுக்கு தமது முதல் இனிங்சில் ஆடிய மே.இந்திய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. மேற்கிந்திய அணி சார்பில் பிராவோ 50 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 6 விக்கட்டுகளை பதம் பார்த்தார்.
மீண்டும் பலோ ஓன் முறையில் தமது இரண்டாவது இனிங்சை ஆடிய மேற்கிந்திய அணி இன்றைய நான்காம் நாள் ஆட்ட்த்தின் போது சகல விக்கட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஒரு இனிங்ஸ் மற்றும் 06 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

0 comments:
Post a Comment