அண்மையில் தோண்டி எடுக்கப்பட்டது றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினுடைய சடலம் தானா என்பதை உறுதி செய்ய மரபணு பரிசோதனை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தாஜூடினின் தாயுடைய மரபணுக்கள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் இரகசியப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பில் 31 பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதிக்கு மீண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

0 comments:
Post a Comment