சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, October 27, 2015

அமெரிக்க இராஜங்க திணைக்களத்தின் தூதர் இலங்கை வருகிறார்

By on 7:24 PM

அமெரிக்க இராஜங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, உலக பெண்களின் பிரச்சினைகள் தொடர்பான அமெரிக்க இராஜங்க திணைக்களத்தின் தூதர் கேத்தரின் ரஸ்ஸல் இலங்கை வரவுள்ளார். 

அமெரிக்க இராஜங்க திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. 

இந்த விஜயத்தின் போது அரச மட்ட உயர் அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மத தலைவர்களுடனும் பேச்சுக்களை நடத்த கேத்தரின் ரஸ்ஸல் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க இராஜங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பாலின அடிப்படையிலான வன்முறை, பெண்களை பொருளாதார மேம்பாடு அடையச் செய்தல், அமைதி மற்றும் பாதுகாப்பு உட்பட பெண்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக குறித்த பேச்சுவார்தைகளின் போது அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment