விமல் வீரவங்சவின் கைது விடயத்தில் அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் எதுவும் மேற்கொள்ள வில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமை மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதாலே பிரதமர் இதில் தலையீடு செய்ததாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் விமல் வீரவங்ச எம். பி.யின் கைது குறித்து வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர்: பாராளுமன்றத்தில் இது குறித்து தினேஷ் குணவர்தன எம்.பி. கேள்வியெழுப் பியதையடுத்தே பிரதமர் இதில் தலையீடு செய்தார்.
அது தவிர அவர் எதுவித சட்ட மீரலும் மேற்கொள்ளவில்லை. இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தவித அரசியல் பழிவாங்கலும் செய்யவில்லை.
அநியாயம் செய்யும் நோக்கம் எமக்கு கிடையாது. சட்டத்திற்கு உட்பட்டதாகவே விமல் வீரவங்சவின் விடயம் கையாள ப்பட்டது.
பொதுவாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் அநீதி இழைக்கப்படுவது வழமை. ஆனால் எம்.பி. ஒருவரின் சிறப்புரிமையை பாதுகாக்கவே அரசாங்கம் தலையீடு செய்தது. ஆனால் தன்னை பழிவாங்குவதாக அவர் கூறி வருகிறார் என்றார்.

0 comments:
Post a Comment