மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான நேற்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி டக்வர்த் லூவிஸ் முறையில் 1 விக்கட்டால் வெற்றிபெற்றது.
காலநிலை சீர்கேடு காரணமாக குறித்தபோட்டி காலதாமதமாகவே ஆரம்பமானது.
நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
இதன்படி, 26 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் போட்டி இடம்பெறவுள்ள நிலையில், துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய இலங்கை அணி, 24.5 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் ரி.எம்.டிலாஷான் தெரிவு செய்யப்பட்டார்.


0 comments:
Post a Comment