மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி அல்லாஹ்வின் அருளினால் தனது கல்விப் பயணத்தில் கால் நூற்றாண்டை தாண்டி பயணித்துக் கொண்டு இருக்கின்றது, அல்ஹம்துலில்லாஹ்.
1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி 22 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் கல்விப்பயணம் அல்லாஹ்வின் அருளால்; இன்று குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தைக்கண்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
ஒரு கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பு என்பது அக்கல்லூரியின் மிக முக்கிய அங்கமாகும். அந்த வகையில் கால் நூற்றாண்டை தாண்டிய இஸ்லாஹிய்யாவின் பயணத்தில் அதனது பழைய மாணவர் அமைப்பி;ன் பங்களிப்பும் ஒத்தாசையும் மிகக் காத்திரமாக அமைந்துள்ளமை கண்கூடாகும்.
1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாஹிய்யாவின் பழைய மாணவர் அமைப்பு 2015 இவ்வருடத்துடன் 12 வருடங்களை பூர்த்திசெய்கின்றது. இன்று 250 இற்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டுள்ள பழைய மாணவர் அமைப்பின் பணி மேலும் எமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் காத்திரமாக வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இஸ்லாஹிய்யா நிருவாகவும் மற்றும் அதன் பழைய மாணவர் அமைப்பான ALUMNI ASSOCIATION உம் பல்வேறு திட்டங்களை வகுத்து எதிர்காலங்களில் செயற்பட பிரயத்தனம் எடுத்துள்ளது.
பொதுக்கூட்டம் AGM 2015
இஸ்லாஹிய்யா பழைய மாணவர் அமைப்பில் 180க்கும் அதிகமான பட்டதாரிகள் உட்பட கல்லூரியில் 02 வருடங்களுக்கு அதிகமான கல்வியாண்டினைப் பூர்;த்தி செய்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
ஓவ்வொரு வருடமும் நடுப்பகுதியில் பழைய மாணவர் அமைப்பின் பொதுக்கூட்டம் Annual General Meeting (AGM) நடைபெறுகின்றது, இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் அடுத்த இரு வருடத்திற்கான புதிய நிர்வாகத் தெறிவு, புதிய அங்கத்தவர்கள் உள்வாங்கள் மற்றும்; கல்லூரியின் அபிவிருத்திக்கு புதிய திட்டங்கள் முன்மொழிதல் உட்பட கலை நிகழ்ச்சி போன்ற பல்வேறு அம்சங்கள் நடைபெறுகின்றன.
இன்ஷா அல்லாஹ் அந்தவகையில் 2015 ஆம் ஆண்டிற்கான இஸ்லாஹிய்யா பழைய மாணவர் அமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இம்முறை சற்று வித்தியாசமாகவும் விசேசமாகவும் 'இஸ்லாஹிய்யாவின் அபிவிருத்தி' என்ற கருப்பொருளில் இரண்டு அமர்வுகளாக நடாத்துவதற்கு இஸ்லாஹிய்யா பழைய மாணவர் அமைப்பினால் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
'இஸ்லாஹிய்யாவின் அபிவிருத்தி' கலந்துரையாடல்
இன்ஷா அல்லாஹ் நவம்பர் மாதம் 25ம் திகதி புதன்கிழமை காலை 09 மணி முதல் இஸ்லாஹிய்யா வளாகத்தில் நடைபெற உள்ள இஸ்லாஹிய்யாவின் அபிவிருத்தி கலந்துரையாடலின் போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட உள்ளன
KEY AREAS OF DISCUSSION
1. SWOT ANALYSIS - SWOT பகுப்பாய்வு –
இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பகுப்பாய்வு செய்தல்.
2. BRAINSTORMING அமர்வு
Brainstorming session to define objectives of ISLAHIYYAH
பகுப்பாய்வு செய்து பெறப்பட்ட முயற்சிகள் கருத்துக்கள் என்பவற்றை பட்டியலிட்டு அதனை சேகரித்து எமது நோக்கங்களின் அடைவுகளை அடையாளப்படுத்துவதற்கு குழுக் கலந்துரையாடல் மேற்கொள்ளல்.
2. Generate the Idea and
Pooling - கருத்துக்களின் தொகுப்பாக்கம் உருவாக்கல்
குழுக் கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் பிரச்சினைகள், கருத்துக்கள் என்பவற்றை ஒரு முறையான தொகுப்பாக வடிவமைத்தல்.
3. Prioritize and writing the
projects - முன்னுரிமை மற்றும் திட்டங்கள் வரைதல் -
முறையாக தொகுக்கப்பட்ட கருத்துக்களைக் கொண்டு திட்டங்கள் வரைந்து அவற்றை முன்னுரிமையின் அடிப்படையில் செயற்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மற்றும் இஸ்லாஹிய்யா பழைய மாணவர் அமைப்பின் நாட்டிற்கும் சமூகத்திற்குமான அடுத்த கட்ட நகர்வுகள் போன்ற முக்கியமான விடயங்கள் மேற்கொள்ளல்.
மேற்படி 'இஸ்லாஹிய்யாவின் அபிவிருத்தி' என்ற கருப்பொருளில் நடைபெற உள்ள கலந்துரையாடலுக்கு இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் மற்றும் குறைந்தது இரண்டு வருடங்கள் கல்விகற்றவர்கள் கலந்து கொள்ள முடியும்.
இரண்டாம் அர்வு :
முதலாம் அமர்வான் 'இஸ்லாஹிய்யாவின் அபிவிருத்தி' கலந்துரையாடலின் போது பெறப்பட்ட தீர்மாணங்களை திட்டமிடல்களை அமுல்படுத்துவதற்கும் புதிய நிர்வாக தெரிவுகளை மேற்கொள்வதற்கான அமர்வாக இவ் இரண்டாம் அமர்வு நடைபெற உள்ளது. (இரண்டாம் அமர்வின் திகதி மற்றும் நேரம் முதலாவது அர்வின் முடிவில் தீர்மாணிக்கப்படும்
மேலதிக விபரங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
இன்ஷா அல்லாஹ்
மேலதீக தகவல்களுக்கும் தொடர்புகளுக்கும்.
அஷ்ஷெய்க் நவ்ஸர் இஸ்லாஹி
077 357 3679, 071 357 3679
அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அஸாம் இஸ்லாஹி
077 787 4984
அஷ்ஷெய்க் அஸ்லாம் ஹாபிஸ் இஸ்லாஹி
077 664 7928
அஷ்ஷெய்க் இப்திகார் இஸ்லாஹி
077 505 2735
அஷ்ஷெய்க் அப்துல் மலிக் இஸ்லாஹி
077 238 3533
அஷ்ஷெய்க் அமாஸிர் இஸ்லாஹி
077 787 8499
அஷ்ஷெய்க் ஆலிப் அலி இஸ்லாஹி
077 575 3485

0 comments:
Post a Comment