இலங்கையில் 13–வது அரசியல் சட்ட
திருத்தத்தை ராஜபக்ச அரசு ரத்து செய்கிறது? ஆட்சி அதிகாரத்தில்
பங்கு என்ற தமிழர்களின் கனவு கலையும் ஆபத்து
இலங்கையில் 13–வது அரசியல் சட்ட திருத்தத்தை ராஜபக்ச அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து
வருகிறது. இதனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற தமிழர்களின் கனவு கலையும் ஆபத்து
ஏற்பட்டுள்ளது.
13–வது அரசியல் சட்ட திருத்தம்
இலங்கை
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், JR க்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது.
சட்ட திருத்த
ரத்து பிரசாரம்
இந்த நிலையில், தமிழர்கள் வாழ்கிற வடக்கு மாகாணப் பகுதியில் செப்டம்பர் மாதம் தேர்தல்
நடத்தப்படும் என ராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. அதில் தமிழர்கள் கட்சியான தமிழ்
தேசிய கூட்டணி ஆட்சியைப் பிடித்து விடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படி
இந்தக் கூட்டணி வெற்றி பெற்றுவிட்டால், தமிழர்களின் கை
ஓங்கி விடக்கூடும்.தமிழர்களின் ஆட்சி அதிகார கனவை கலைக்கிற வகையில், ராஜபக்சேயின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஹெரிடேஜ் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய இரு சிங்களக் கட்சிகளும் நடவடிக்கையில் இறங்கி
உள்ளன. இவ்விரு கட்சிகளும் அரசியல் சட்டத்தின் 13–வது திருத்தத்தை
நீக்க வேண்டும் என்று பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளன.
தனி நபர் மசோதா
‘‘வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டணி
வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி விட்டால், அவர்கள்
சுதந்திரத்தை பிரகடனம் செய்வார்கள், இது
விடுதலைப்புலிகளால் அடைய முடியாத தமிழ் ஈழத்தை, தமிழ் தேசிய
கூட்டணி அடைவதற்கு வழிவகுத்து விடும்’’ என இந்த சிங்கள
கட்சிகள் கூறுகின்றன.எனவே அரசியல் சட்டத்தின் 13–வது திருத்தத்தை
நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் தனி நபர் மசோதா கொண்டு வர இக்கட்சிகள்
திட்டமிட்டுள்ளன.
ராஜபக்சே
நடவடிக்கை
இதற்கு ஏற்ற
வகையில், பாராளுமன்ற தேர்வுக்குழுவின் கூட்டத்தை
ராஜபக்சே கூட்டி உள்ளார். இதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, 13–வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்து விடலாம் என்பதே அவரது திட்டம்.13–வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்து விட ராஜபக்சே அரசு
உத்தேசித்துள்ளது தொடர்பாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், பெட்ரோலியத்துறை மந்திரியுமான அனுரா யப்பாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு
அவர், ‘‘அரசியல் சட்டத்தில் எந்தவொரு மாற்றம் செய்ய
வேண்டுமென்றாலும், அதற்கான உண்மையான மன்றம் என அரசு கருதுவது
பாராளுமன்ற தேர்வுக்குழுவைத்தான். அதைத் தவிர வேறு வழியை அரசு நாடாது. இந்த
பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விரிவான ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது’’ என்று மட்டும் பதில் அளித்தார்.எனவே தமிழர்கள் பகுதியில் அவர்களுக்கு சுயாட்சி
வழங்க வகை செய்துள்ள அரசியல் சட்டத் திருத்தத்துக்கு ஆபத்து காத்திருப்பதையே இது
காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment