தேரர்
நடத்திய தீக்குளிப்பு நாடகம் பின்னணி என்ன?
இலங்கை நாட்டில் முஸ்லிம்களால்
பசுவதை இடம்பெறுவதாகக் கோஷமிட்டுக் கொண்டு அதற்கு எதிராக பௌத்த பிக்கு
ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெசாக் தினத்தன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு
முன்னால் தனக்குத் தானே தீ மூடிக்கொண்டு தற்கொலை செய்ததாக செய்திகள் பல
வெளியாகின.
குறித்த செய்தியை பலதரப்பட்ட
ஊடகங்களும் அறிவித்துக் கொண்டிருந்த வேளையில்
சம்பவ இடத்தில் இருந்து
நேரடியாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோக் காட்சியொன்றும் வெளியாகியது.
இச்சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில்
சற்று சங்கடத்துடன் காணப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் சகோதர இனத்தைச் சேர்ந்த
பொதுமக்கள் இவ்வீடியோக் காட்சியை காணக்கிடைத்ததன் பிற்பாடே இதன் பின்னணி
என்னவென்பதனை ஊகித்துக் கொண்டனர்.
தீக்குளித்த பௌத்த பிக்கு யார்?
ஜாதிக ஹெல உறுமய என்னும் பயங்கரவாதப் போக்கையுடைய
அமைப்பின் ஓர் உறுப்பினரே தீக்குளித்து இறந்து போன முப்பத்தி ஐந்து
வயதான போவத்த இந்திர ரத்ன தேரராவார்.
இறந்து போனவர்கள் யாராக
இருப்பினும் அவர்களைப்பற்றிய விடயங்களை சந்திக்கு இழுப்பது தவறான அணுகு
முறையாகப் படலாம்.இருப்பினும் குறித்த தேரருடைய மரணத்தின் மூலம்
இந்நாட்டின் பூர்வீகக் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு வேட்டுவைத்துக்
கொண்டிருக்கும் இனவாதிகளை சுய ரூபத்தை வெளியுலகிற்குக் காட்டுவதே இக்கட்டுரையின்
நோக்கம் என்பதனை இவ்விடத்தில் அழுத்தமாகப் பதிவு செய்து கொள்கிறேன்.
இவரின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து
சிங்கள மொழிச் செய்தி ஊடகம் ஒன்று கருத்து வெளியிடுகையில்,
இவர் ஒரு பிரதேச சபையின் உறுப்பினராக
கடமையாற்றியவர் என்றும் அக்காலப்பகுதியில் அப்பிரதேச வாழ் மக்களிடம் இலங்கை மின்சார
சபையில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் இருபது இலட்சத்துக்கும் மேற்பட்ட
தொகையினை அபகரித்துள்ளார் என்றும், ஆசிரியர் நியமனம் பெற்றுத்
தருகின்றேன் எனக்கூறி பத்து லட்சம் ரூபா பணத்தையும் சூறையாடியுள்ளார் எனவும்
தெரிவிக்கிறது. அத்தோடு குறித்த இத்தேரர்
மரணிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் நீதிமன்றப் பிடியாணை
பிறப்பிக்கப்பட்டவராவார்.
வழமை போன்று காவியுடை தரித்தவர்கள் காடைத்தனத்தில்
ஈடுபடுகின்ற பொழுதுகளில் கைது செய்யத் தவறுகின்ற பொலிசார் இவர்
விடயத்திலும் பாராமுகமாகவே இருந்துள்ளனர். மேலும்
கடந்த
வருடம் தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா ஜும்மா பள்ளிவாயில்
காவியுடை
தரித்த
பயங்கரவாதிகளால் தாக்கப்படும்போது அத்தாக்குதல் சம்பவத்தில் இவர்
பங்கு
கொண்டதும் அதனை தடுக்க முற்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு முன்பாக
தனது
காவியுடையை களைந்து கூச்சலிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பசுவதையா,
உயிர்வதையா?
பொதுவாக ஒரு ஜனநாயக நாட்டில் பலவகையான மதத்தினர்களும்,அம்மதங்களுக்குரிய கலாச்சாரங்களும் ஒன்றித்துக் காணப்படுவது இயல்பான ஒரு விடயமே, அதேபோன்று அம்மதங்களைப் பின்பற்றுவோருக்குரிய உணவுபழக்க வழக்கங்களும், கலாச்சாரங்களும் வித்தியாசமானதாகவே காணப்படும்.
அந்த வகையில் முஸ்லிம்களைப் பொறுத்த வரையில்
அவர்கள் தங்களின் அன்றாட உணவில் புலால் உணவுகளை சேர்த்துக்
கொள்கின்றனர்.ஆனால் எந்தவொரு முஸ்லிமும் எந்தவொரு தனி மனிதனையோ சமூகத்தையோ புலால்
உண்பதற்கு இறைச்சி சாப்பிடுவதற்கு வலியுறுத்துவதில்லை. ஏன் முஸ்லிம்கள் கூட தனது
வாழ்நாளில் புலால் உணவே உட்கொள்ளாமல் வாழ்ந்து விட முடியும். இஸ்லாமிய
மார்க்கம் புலால் உணவுகள்,
மாமிசம்
போன்றவைகளை
சாப்பிடுவதற்கு
அனுமதியளிக்கிறதே தவிர கட்டாயப்படுத்தவில்லை.
ஆக உணவுப்பழக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய
உடல்தேவைகள்,
பொருளாதார
நிலைமைகள்,
சுற்றுச்சூழல்
போன்றவைகளைப் பொறுத்து வேறுபடுகிறது. ஆனால் இன்று புதிதாக சில
பௌத்த பயங்கரவாத அமைப்புக்கள் தோற்றம் பெற்றதன் விளைவு ஒரு மனிதனின்
ஒரு
சமூகத்தின் கலாச்சாரம்,
மதக்
கோட்பாடுகள்,
உணவு
முறைகள் போன்றவற்றை
தீர்மானிக்கும்
உரிமையினை தங்களின் கையில் எடுத்துக் கொண்டு அதில் தங்களையும் தங்களை சார்ந்த
பாமர மக்களின் அறிவீனத்தையும் முதலீடாகக் கொண்டு இந்நாட்டின் எதிர்காலத்தை
இன்னும் பல தசாப்த காலங்களுக்கு படுகுழியில் தள்ளுகின்ற பிற்போக்கான
செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
உண்மையில் இப்பேரினவாதிகள் கூறுவது
போன்று இலங்கை நாட்டில் மாடுகள் அறுப்பதை தடைசெய்ய முற்பட்டால் அதனால் ஏற்படப்போகும்
பின்விளைவுகளை சந்திப்பதற்கு இந்நாட்டுக் குடிமக்கள் சக்திபெற்றவர்களா?
உயிர்வதை என்பது ஏன் மாட்டிற்கு மாத்திரம்
பேணப்படவேண்டும்?
அன்றாடம் நம் நாட்டு மக்கள் உட்கொள்கின்ற
இலட்சக்கான மீன்கள் இங்கேதான் பிடிக்கப்படுகின்றன. ஒருநாளைக்கு இலட்சக்கணக்கான கோழிகள்
உணவிற்காக கொல்லப்படுகின்றன. ஆயிரக்கணக்கான ஆடுகள் அறுக்கப்படுகின்றன.
அவற்றையெல்லாம் சற்றேனும் கூடக் கவனத்தில் கொள்ளாது வெறுமனே மாடுகளை அறுப்பது
தடுக்கப்பட வேண்டுமென்று சகட்டு மேனிக்கு கூப்பாடு போடுவதில் அப்படி என்னதான்
உயிர்கள்மீதுள்ள அன்பு வெளிக்கொணரப்படுகின்றது?
கௌதம புத்தர் தான் வாழ்ந்த காலத்தில் உயிர்கள்
மீது அன்பு காட்டுங்கள் என்று மாத்திரமே கூறினார்.மாறாக இந்த இலங்கை
நாட்டில் மாடுகள் உணவுக்காக அறுக்கக் கூடாதென்றோ, அவ்வாறு அறுக்கப்பட்டால் அதற்கு எதிராக பௌத்த
துறவி(?)கள் தீக்குளிக்க வேண்டுமென்றோ
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது.
இன்னும் சொல்லப்போனால் கௌதம
புத்தரின் காலத்திற்கு அடுத்த தலைமுறையில் வாழ்ந்த பிக்குகள் தங்களின்
உணவிற்காக உயிர்களைக் கொன்றார்கள் என்பதற்கு பௌத்த மத காப்பியங்களில் இருந்து
எண்ணற்ற உதாரணங்களை வகைப்படுத்த முடியும்.
உண்மையில் தற்போது நாட்டில்
உயிர்வதையை எதிர்த்து தீக்குளிப்பு வரை சென்றுள்ள பிக்குமார்கள் கடந்த
சுமார் முப்பது வருட காலத்தில் விடுதலைப்புலிகளால் இலங்கைத் திருநாட்டில்
அப்பாவிப்பொதுமக்கள் இலட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட போதெல்லாம்
வாய்மூடி மௌன விரதம் இருந்ததன் மர்மம்தான் என்ன? கேவலம் உணவிற்காக அறுக்கப்படுகின்ற
அடிமாடுகளின் மீதுள்ள பாசமாவது மனித உயிர்கள்மீது அவர்களுக்கு இல்லாமல் போனதேன்?
ஆக இவர்கள் பசுவதை என்றும் உயிர்வதை என்றும்
கூச்சலிடுவதன் நோக்கம் என்னவென்பது இலங்கை வாழ் அனைத்தின
மக்களுக்கும் மிகவும் தெளிவாகவே புரிந்துள்ளது.
இப்பயங்கரவாத அமைப்புக்கள் தங்களின்
அற்பத்தனமான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, இந்நாட்டில் மீண்டுமொரு இனமுறுகலைத் தூண்டிவிட்டு
அதில் குளிர் காய்வதற்காக மிகவும் நுட்பமான முறையில் திட்டமிட்டு
மேற்கொள்ளப்பட்ட ஒன்றுதான் கடந்த வெசாக் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட
தீக்குளிப்புச் சம்பவம். உண்மையில்
இச்சம்பவத்தை
மிகவும் உன்னிப்பாக உற்று நோக்கினால் இது ஒரு தற்கொலையோ அல்லது பௌத்த பயங்கரவாதிகள்
கூறுவது போன்று இந்நாட்டில் நடைபெறுகின்ற பசுவதைக்கு எதிரான உச்சபட்ச எதிர்ப்போ அல்ல.
இந்நிகழ்வைப் பற்றி இன்னும் தெளிவாக
அறிந்து கொள்ள வேண்டுமானால் தீக்குளிப்புச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்ற ஒரு
நாடுதான் எமது அயல் நாடான இந்தியாவாகும்.அதிலும் குறிப்பாக தமிழ்
நாட்டிலுள்ள அரசியல்வாதிகளின் அந்திம கால ஆயுதமும் இந்தத்
தீக்குளிப்புதான்.
உண்மையில் தீக்குளிப்பு என்பது என்ன?
பொதுவாக மனிதனுடைய இயல்பை நாம் எடுத்து
நோக்கினால் இவ்வுலகில் வாழ்வதற்கே ஒட்டு மொத்த மனிதர்களும் ஆசைப்படுகிறார்கள். விதிவிலக்காக
இவ்வுலக
வாழ்வில் தங்களுக்கு ஏற்படுகின்ற சவால்களை சந்திக்க தைரியமற்ற ஒரு
சிலர்
அவ்வப்போது கடன் சுமை,ஏமாற்றம்,பரீட்சையில் தோல்வி
இன்னும் இது
போன்ற
பல விரும்பத்தகாத ஏனைய மக்களின் இழி பார்வைக்கு இலக்காகின்ற சந்தர்ப்பங்களில் தற்கொலை
முயற்சியில் இறங்கிவிடுகின்றனர்.
அவ்வாறு வாழ்க்கையில் வேதனையின்
உச்சகட்டத்தில் இருக்கின்ற மக்கள் கூட தனது இறுதி நேரத்தை வேதனை இன்றிப்
போக்கிக் கொள்வதையே விரும்புகின்றனர்.அதன் காரணமாகவேதான் அவர்கள் தூக்குக்கயிறு, நஞ்சருந்துதல் போன்ற
சாதனங்கள் மூலம்
தங்களின்
இறுதி முடிவை தேடிக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் இவ்வாறு தங்களை தீயில் வாட்டி
அணுவணுவாக வேதனைப்பட்டு மரணித்துபோவது மிகவும் அரிதானதாகும்.
இவ்வாறிருக்க, அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களும்
மேற்குறிப்பிட்ட தேரர் போன்றவர்களும் தங்களின் மாய்த்துக் கொள்வதற்கு
தீக்குளிக்கின்ற ஒரு செயற்பாட்டை தேர்ந்தெடுப்பதன் பின்னணி என்ன?
உண்மையில் தீக்குளிப்பென்பது
எந்தவொரு மனிதனாலும் விரும்பி செயற்படுத்தப்படுவது கிடையாது. காரணம்
இவ்வுலகில் ஒரு மனிதனின் உடலுக்கு தீயைவிட உச்சபட்ச வேதனையை தரக்கூடிய ஒரு
சாதனம் கிடையவே கிடையாது. அவ்வாறானதொரு வேதனையை
எந்தவொரு மனிதனும் தனது இறுதி மூச்சுப்பிரியும் நேரத்தில் விரும்பவே மாட்டான்
என்பதை ஐயமறக் கூறமுடியும்
ஆனால், மேற்குறித்த தேரர் மற்றும் அரசியல்
ஜால்ராக்கள் போன்றவர்கள் தங்களின் கோரிக்கையினை முன்வைத்து தீக்குளிக்க
எத்தனிப்பது உண்மையில் தீயில் கருகி மரணிப்பதற்காக அல்ல. மாறாக சுற்றியுள்ள
மக்களின் அனுதாப அலைகள் தன்னை நோக்கிப் பாயவேண்டும் என்ற எண்ணமும் அப்படியே
தாங்கள் தீக்குளிக்க முற்பட்டாலும் கூடியுள்ள மக்கள் அல்லது
தங்களின் கட்சி சார்ந்தவர்கள் தன்னை காப்பாற்றிவிடுவார்கள் என்ற
நம்பிக்கையும்தான்.
கடந்த வெசாக் தினத்தன்று தீமூட்டிப் படுகொலை
செய்யப்பட்ட இந்திர ரத்ன தேரருடைய விடயத்திலும் இவைகள்தான் நடந்தேறின. ஆனால், தேரர் அவர்கள் நினைத்தது
நடக்கவில்லை. காரணம்
தேரரின்
நோக்கம் தீக்குளிப்பதல்ல என்பது சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட
வீடியோக்
காட்சியைப் பார்த்த அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.ஏனெனில்
தேரர்
தன்மீது பெற்றோலை ஊற்றுகின்ற போது அவரிடம் பெட்ரோல் கொள்கலன் மாத்திரமே இருந்தது.அவர்
தன்மீது பெற்றோலை ஊற்றிக்கொண்டு மக்களின் அனுதாபத்தை பெற அல்லது தனது உயிர்வதைக்கு
எதிரான கோரிக்கையினை நிறைவேற்றிக்கொள்வதையே நோக்காகக்
கொண்டிருந்தார்.
ஆனால், அவரின் துரதிர்ஷ்டம் அவரை ஏவிவிட்ட
நயவஞ்சகர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பட்டப் பகல் வேளையிலேயே கண்டி
ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாகவே அவரை தீயில் வாட்டிப் படுகொலை
செய்துவிட்டனர்.இதை கொலைசெய்யப்பட்ட தேரர் சற்றும் எதிர்பார்த்திருக்க
வாய்ப்பில்லை.ஏனெனில் தீப்பிடிப்பதற்கு ஒருசில நொடிகளுக்கு முன்னால்
அவருடைய கண்களில் மிரட்சியான பார்வை காணப்படுவதை உணரக்கூடியதாக உள்ளது.
எனவே, கடந்த வெசாக் தினத்தன்று கண்டி ஸ்ரீ தலதா
மாளிகைக்கு முன்பதாக தீப்பற்றி எரிந்துபோன போவத்த இந்திர ரத்ன தேரரின் மரணம்
தற்கொலை அல்ல,
அது
ஒரு
திட்டமிடப்பட்ட
குரூரப்படுகொலைதான் என்பது வெள்ளிடைமலையாக நிரூபணமாகிறது.
இப் படுகொலையின் நோக்கம் என்ன?
கண்டி
மாநகரைப்
பொறுத்தவரையில் அங்கே ஆண்டாண்டு காலமாக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களின் உறவுகள்
மிகவும் வலுவானதொரு கட்டமைப்பைக் கொண்டுள்ளன. அத்தோடு கண்டி நகரம் மத்தியமாகாண
முஸ்லிம்களின் வர்த்தக கேந்திர மையமாகவும் காணப்படுகின்றது.
இதன் காரணமாகவேதான் கடந்த சில மாதங்களுக்கு
முன்னால் பொது பல சேனா என்னும்பயங்கரவாத அமைப்பு தனது இனவாத
மாநாட்டிற்கு கண்டி நகரின் மையப்பகுதியை தேர்ந்தெடுத்தது. இவ்வாறு
முஸ்லிம்களின்
வர்த்தக ஆதிக்கத்திற்குள் இருக்கின்ற கண்டி நகரில் முஸ்லிம்கள் மீது இனவாதத்
தாக்குதல் நடாத்துவதற்கு மிகவும் தத்ரூபமான வகையில் திட்டமிடப்பட்ட ஒரு செயல்பாடாக
இத்தீக்குளிப்பு நிகழ்வை நாம் கருதுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
அதே நேரம் இலங்கை நாட்டில் தற்போது நிலவுகின்ற பௌத்த
பேரினவாதிகளின்
செயற்பாடுகளுக்கு
சாதாரண சிங்கள மக்களின் ஆதரவு மிகவும் குறைவானதாகவே காணப்படுகிறது.சாதாரண
மக்களின் அனுதாபத்தை தங்கள் வசம் ஈர்த்துக்கொள்வதற்கு பேரினவாதிகள் திட்டமிட்டு
நிகழ்த்திய ஒரு சதியாகவும் இதனை நோக்க முடியும்.
எது எவ்வாறு இருப்பினும் இலங்கை நாட்டில்
வாழ்கின்ற முஸ்லிம்களின் கடந்த கால வரலாற்றை எடுத்து நோக்கினால் வேறு எந்தவொரு
சமூகமும் சந்தித்திராத அளவிற்கு இனவாதிகளால் பல்வேறுபட்ட இன்னல்களுக்கும்
முகம் கொடுத்த ஒரு சமூகம் முஸ்லிம் சமூகம்.
தற்போது பௌத்த பேரினவாதம்
முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள், கலாச்சாரக் கட்டமைப்புக்கள்
போன்றவற்றை சூறையாட எத்தனிக்கின்ற பொழுதுகளில்கூட முஸ்லிம் சமூகம் மிகவும் சாதுரியமான
முறையில் அவற்றை எதிர்கொண்டு இந்நாட்டின் ஜனநாயகத்திற்கு இம்மியளவும் இழுக்கை
ஏற்படுத்தாது முறையில் தங்களின் அன்றாட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இப்படியான நாட்டின் சமாதானத்திற்கும்
இறைமைக்கும் பங்கம் ஏற்படுத்த நினைக்காத நாட்டின் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும்
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவிக்கரம் நீட்டக்கூடிய உயிரோட்டமான ஒரு
சமூகத்திற்கெதிராக வேர்விடுகின்ற பேரினவாத செயற்பாடுகளை இனியும் வளரவிட்டு
வேடிக்கை பார்ப்பதை நிறுத்தி விட்டு முஸ்லிம்களின் மதரீதியான ஜனநாயக
உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய வழிவகைகளை இறைமையுள்ள இவ்வரசாங்கம் மேற்கொள்ள
வேண்டும்.
தேர்தல் காலங்களில் மாத்திரம்
முஸ்லிம் பிரதேசங்களுக்கு வருகை தந்து முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி வானளாவப்
பேசுகின்ற தலைவர்கள் தேர்தல் முடிந்த கையேடு ஆசனங்களை ஆக்கிரமித்துக்
கொள்வதற்கான வேலைகளில் மாத்திரமே உன்னிப்பாக இருப்பது ஆற்றைக் கடக்கும்
வரைதான் அண்ணன் தம்பி என்பது போலவே உள்ளது. இந்நிலை
மாறி
முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் தலை நிமிர்ந்து வாழக்கூடிய ஒரு கௌரவமான
சமூகமாக
மாறுவதற்கு முஸ்லிம்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள்
பாடு
படவேண்டும். முஸ்லிம்களுக்கு
இழைக்கப்படுகின்ற அநீதிகள் சுதந்திரமான முறையில் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட
வேண்டும்.
அது அல்லாமல் அரசாங்கத்தின் மூலம்
கிடைக்கப்பெறுகின்ற அற்ப சொற்ப இலாபங்களுக்காக முஸ்லிம்களின் விடயத்தில்
வாய்மூடி மௌனம் காத்தோமே யானால் நாம் ஒவ்வொருவரும் நம் சமூகத்தின்
பொறுப்பாளிகள். நாளை மறுமையில் நமது பொறுப்புக்கள் பற்றி நிச்சயம் நாம் மிகவும்
கடுமையான முறையில்
விசாரிக்கப்படுவோம்
என்பதை மாத்திரம் நினைவில் இருத்திக்கொள்வோம்.


0 comments:
Post a Comment