மட்டக்களப்பு விவகாரம் கற்றுத்தந்த பாடமும், எதிர்காலமும்
![]() |
மட்டகளப்பு காலங்காலமாக தமிழர்களுக்கு என்றே பெயர் போன இடமாகும். கடந்த தினமொன்றில் நகரத்தினுள் பிரவேசிக்கும் பிரதான வழியொன்றில் புத்த சிலை ஒன்றினை நிர்மானிக்க மேற்கொண்ட முன்னெடுப்புக்களுக்கு மட்டகளப்பு வாழ் மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இம் முன்னெடுப்புக்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் சிறி மங்கலாராம தேரரே. மட்டகளப்பு நகருக்கு வடத்திசையில் உட்பிரவேசிக்கும் பிள்ளையார் சந்தியிலேயே இப்புத்தர் சிலையை நிர்மானிப்பதற்காக அவர் உத்தேசித்திருந்தார். இதற்க எதிராக மட்டகளப்பு மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிக்காடியதால் அதனை நிர்மானிபதற்கான தற்காலிக தடை ஒன்றை நீ.ம. வழங்கியது.
அத்தீர்ப்பு வழங்கப்பட்ட தின இராப் பொழுதில் மட்டகளப்பு மாவட்டத்தின் மிகப் பிரதானமான 04 கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறுக்கல்மடம் சிறி செல்ல கதிர்காமர் கோவில், மாங்காடு பிள்ளையார் கோவில், கிரான் குலம் அய்யனார் கோவில், பாண்டிருப்பு திரௌபதியம்மன் கோவில் ஆகிய கோவில்களிலேயே மேற்படி கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்கோவில்களில் காணப்பட்ட கடவுற்சிலைகளுக்கு பங்கம் ஏற்படுத்திய கொள்ளைகாரர்கள் மிகப் பெருமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஓர் தனி இராப்பொழுதில் 04 கோவிலகளிலும் கொள்ளை கும்பல் ஒன்று பாய்ந்து கொள்ளையிட்டுள்ளது என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக இது மிகவும் திட்டமிடப்பட்டு ஓர் குழுவாய் செய்யப்பட்டிருக்கலாம் என்பதையே காட்டி நிற்கின்றது. மட்டகளப்பு போன்ற அதியுயர் பாதுகாப்பு தரப்பினரையும் தாண்டி இவ்வாரான கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுவது மிகவும் இலகுவான காரியமன்று. அதனால் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள், இச்சம்பவம் குறித்த உயர் அதிகாரிகளி;ன் ஒத்துழைப்புடனேயே மேற் கொள்ளப்பட்டிருக்கலாம் என எண்ணுகின்றனர். அது போலவே மட்டக்களப்பு நுழைவாயிலில் நிர்மானிக்கப்பட இருந்த புத்தர் சிலைக்கு தாம் எதிர்ப்பு தெரிவித்ததன் எதிர் விளைவே இதுவெனவும் எண்ணத் தோன்றுகின்றது. மேலும் இவ்வாரான மோச செயல்களில் ஈடுபடும் எவரும் கைது செய்யப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை. இது தீர்க்கப்படாத பிரச்சினைகளின் வரலாற்று பக்கங்களில் பதிவாகும் என்பதில் கூட ஜயமில்லை.
சிங்களவர்கள் அதிகமாக வாழும் புனிதத் தலங்களுக்கு நுழையும் வாயிலில் தமிழ் பண்பாட்டுக்குரிய சிலைகளை அமைப்பதற்கு எந்தவொரு பௌத்தமும் இணங்குவார்களா? மட்டக்களப்ரபு மக்கள் வெளியிட்டது போன்று எதிர்ப்பையே அவர்களும் வெளியிட்டு இருப்பர். அதனால் நகருக்குள் இருக்கும் ஏனைய புனிதத் தலங்கள் ஒருபோதும் உடைக்கப்பட மாட்டாது. அவ்வாரான கொடூர செயல்களில் ஈடுபட முனையும் விஷமிகளோ அல்லது அதற்கான
அவகாசமோ கிடைக்கவே இல்லை. அப்படியென்றால் தமிழ் மக்கள் வாழும் முப்படையினர் தவிர வேறு எவரும் அற்ற மட்டக்களப்பு நகரில் ஓர் எதிர்ப்பு நடவடிக்கைக்காக நகரிலுள்ள 04 மதத்தலங்கள் சேதமாக்கப்பட்டது எப்படி? ஏன்?
இலங்கையை ஆட்கொண்ட கொடூர யுத்தம் வட, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எதிர் கொண்ட அரசியல் வாழ்வின் நினைவுச் சின்னமாகும். அப்படியெனின் தமிழ் மக்கள் எப்போதும் அடிமைவாசிகளாகவே வாழ வேண்டும் என்பது பொருளா? தமது உரிமைகளை மீட்டெடுக்க வீதியில் இறங்கும் அரசியல் தலைகளின் மீது கருப்பெண்ணெய் எறிவது அடிமை படுத்தலின் பிறிதொரு செயற்பாடே. கடந்த காலங்களில், குறைந்தளவு ஜந்து முறையாவது இவ்வாரான சம்பவங்களுக்கு சமூக தொண்டர்கள் ஆளாகி உள்ளனர். அது போன்றே 03 முறை இவ்வாரான மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட போதும் அவர்களின் மேல் எவ்வித வழக்கும் தொடரப்பட்டதாக தெரியவில்லை. கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தின் மீது கருப்பெண்ணெய் வீச முற்பட்டவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்த வேளை அவர் தனது குழுவின் ஒருவர் என ஓர் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கூட்டங்கள் யாவும் தமிழிழ விடுதலைப்புலிகளினாவேயே ஒழுங்குபடுத்தப்படுகின்றன என்கின்ற மாயையை உருவாக்க தமிழிழ விடுதலைப்புலிகளின் கொடியை ஏந்திய ஒருவரை அக் கூட்டத்தினுள் அனுப்பி வைக்கும் சதி முயற்சியினை பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டு செயற்படுத்துவதாகவும் தெரிய வருகிறது. ளஅவ்வாரான நபர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியான போதும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட வில்லை. தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் தலைவர்களை அடிக்கடி கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைத்து விசாரணை மேற்கொள்வதும் அதன் ஓர் அங்கமே.
இந்நாட்டின் தமிழ் மக்களின் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் அபிலாசைகள் அனைத்தும் பேரின சக்திகள் தீர்மானிக்கும் அபிலாசைகளே. கிளிநொச்சியில் மாத்திரம் 100க்கும் மேற்பட்ட இராணுவ ஆசிரியர்கள் சிங்களம் கற்றுக் கொடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். (அண்மைக்கால தகவல்). அங்கு முற்பள்ளிக் கூடங்களும் இராணுவத்தினராலேயே பராமரிக்கப்படுகின்றன.
பூரண அரச அனுசரனையுடன் வட, கிழக்கில் இராணுவத்தினர் போதி மரங்களை நடுவதிலும், விகாரைகளை அமைப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வெசாக் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, வெசாக் கூடுகளை அமைப்பது என அனைத்தும் மேற் கொள்ளப்படுகிறது. கிறிஸ்தவர்களின் கிறிஸ்மஸ் உற்சவம், தமிழர்களின் தீபாவளி பொங்கல் நிசழ்வுகள், முஸ்லிம்களின் இரு வேறு பெருநாட்கள் என வேறு எவற்றிலும் இராணுவத்தினரின் பார்வை செலுத்தப்படுவதாக தெரிவதற்கில்லை. அது மாத்திரமல்ல, கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடத்தப்பட இருந்த தமிழர்களின் விளக்கேற்றும் சம்பிரதாய நிகழ்வுகளைளக் கூட இராணுவத்தினர் எதிர்த்து இருந்தனர்.
தமிழ் மக்களின் பரம்பரை காணிகள் அதியுயர் பாதுகாப்பு வலயம் எனும் நாமம் சூட்டப்பட்டு இராணுவத்தினரினால் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த நிலத்தில் பயிர் செய்கை மேற்கொண்டு, பெறப்படும் விவசாய பொருட்களை அத் தமிழருக்கே விற்பனை செய்யும் கொடூரம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரினால் மேற் கொள்ளப்படும் வியாபார நிலையங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தற்போது யாழ்ப்பாணத்தில் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் தரைப்படை கிராமம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 6000 ஏக்கர் என்பது சாதாரண பெருமானமா?
![]() |
| Protest Against The Attack |
கொடூர யுத்தத்தை தொடர்ந்து இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கானது. இவ்வரசாங்கம் தமிழ் மக்களை ஏலெடுத்தும் பார்க்க முன் வருதில்லை. இக் கோட்பாட்டினாலேயே மற்றைய மாகாண சபைகள் தொடர்பில் காட்டாத பயம் வட மாகாண சபைத் தேர்தல் எனும் போது ராஜபக்ஷவினரை பிடித்தாட்டுகிறது. ராஜபக்ச அரசு உருவாகி 08 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று தான் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கதை எழுப்புகிறது. மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைப்பதற்கு முனைவதன் மூலம் அவர்களிடம் வட மாகாண சபைத்தேர்தலின் மீத இருக்கும் விசுவாசமின்மையும், பயமும் தெளிவாகிறது. இலங்கையில் ஏனைய ஏதாவதொரு மாகாண சபை எதிர் கட்சியினர் கைப்பற்றினால் கூட இவ்வாரான பயம் ராஜபக்ஷவினருக்கு ஒருபோதும் எழாது. இப்பயமும், விசுவாசமின்மையும் காணப்படுவது தமிழரிடத்தில் மாத்திரமே. அவை பெரும்பாலும் முஸ்லிம் மக்கள் பாலும் திரும்ப வாப்புண்டு.
மொத்த சனத்தொகையில் 20மூ இருக்கும் மக்களை அதாவது சர்வதேச மட்டத்தில் பேசும் அளவுக்கு கோரம் பொருந்திய சக்திமிக்க சிறுபான்மை சகம் தெடர்பில் இவ்வாரான விசுவாசமின்மையை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் அவர்களை அடிமைகளாகக் காட்ட விளைவதால் இலங்கைக்கு சுகபோக வாழ்க்கை கிட்டுமா? மிகக் குறுகிய கால இன்பம் பொருந்திய இவ்வாரான செயற்திட்டங்கள் எதிர் காலத்தில் நாட்டை இரு தூண்டாக்க விளைவதாக உள்ளதே ஒழிய ஓர் நாடாக ஒன்று சேர்ப்பதாக இல்லை என்பதை ராஜபக்சவினர் ஏன் புரிந்து கொள்கின்றனர் இல்லை.?...
இரத்தத்தினால் எழுதப்படும் எழுத்துக்கள் நிற வர்ணங்களினால் எழுதப்படும் எழுத்தை விடவும் பலமானவையாகும். ஏதாவது ஒரு சமூகத்தின் இரத்தத்தினால் எழுதப்படும் வரலாற்றினை ஒரு போதும் நிற வர்ணங்களினால் எழுதப்படும் வரலாற்றின் மூலம் அழித்து விட முடியாது. நாட்டின் நிலையான சக வாழ்வும் சுபிட்சமும் நிலவ வேண்டும் எனின் அங்கு நம்பிக்கையும், சமத்துவமும் நிலவ வேண்டும். மாறாக பலத்தின் மூலம் எதையும் சாதிக்கவே முடியாது. துன்னைய வரலாறும் அதுவே.
மட்டக்களப்பு இந்து கோவில்களை சேதப்படுத்திய நபர்கள் இவ் வரலாற்றினை அறிந்திரா விட்டாலும் அரச உயர் அதிகாரிகள் அனைவரும் இதனை அறியாது செயற்படலாமா?.............
முக்கியம் - ராஜபக்ச அரசின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள 'ஈனிசா' ஊடகத்தத்துவங்கள் சட்டமாக்கப்பட்டால் இந்த கட்டுரையை எழுதுவது மற்றும் அதனை பிரசுரிப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.....





0 comments:
Post a Comment