சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, June 30, 2013

கலஹாவில் கடமைதவறிய பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தம்

By on 8:59 PM


கலஹா பொலிஸ் நிலையத்தின் பிரதி பொறுப்பதிகாரி மற்றும் குற்ற விசாரணை பொறுப்பதிகாரி ஆகியோர் தமது பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மதுபோதையில், செயல்பட்டதன் காரணமாகவே இவர்கள் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிரிவர்தன தெரிவித்துள்ளார்.

கலஹா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொது மக்களால் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

விசாரணைகளின் போது குற்றவாளிகளாக காணப்பட்ட இந்த அதிகாரிகளுக்கு பணிநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment