13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட இனப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமது கட்சி பங்கேற்காது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முண்ணனி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இத் தெரிவுக் குழுவில் பங்கேற்காது என அறிவித்துள்ள நிலையில் தமது கட்சியும் பங்கேற்கப்போவதில்லை என தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் இன்று காலை இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள வடக்கு தேர்தலில் தமது கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment