தென் கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை காலை பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டமையைக் கண்டித்தும், குறித்த மாணவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுமே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய முயற்சித்தபோது பல்கலைக்கழக பிரதான நுழை வாயிலை மூடி பொலிஸார் தடுத்தனர்.
பகிடிவதையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டினை முன்வைத்து கமலஸ்ரீ எனும் மாணவருக்கு பல்கலைக்கழக நிருவாகம் வகுப்புத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment