சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, June 28, 2013

Selected International News

By on 1:40 AM

தனது பிறப்புறுப்பை தானே  வெட்டிக்கொண்ட நபர் 



கற்பனையான காட்சிகளை கண்ணின் முன் தோன்ற வைக்கும் மாய காளான் எனும் போதையூட்டும் காளான் வகையை அளவுக்கதிகமாக உட்கொண்ட நபரொருவர் தனது பிறப்புறுப்பை தானே வெட்டிய சம்பவம் அமெரிக்க மிக்ஸிக்கன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்த சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. 
மேற்படி 41 வயது நபர் அளவுக்கதிகமாக மாயக் காளானை உண்ட பின்னர் யபிஸிலன்தி நகரிலுள்ள பாடசாலையொன்றின் ஜன்னலை உடைத்து உட்பிரவேசித்துள்ளார். 

அதன் பின் கத்தியொன்றால் பிறப்புறுப்பை வெட்டிக் கொண்ட அந்நபர் பாடசாலைக்கு முன்னாலுள்ள வீதியில் நிர்வாணமாக மண்டியிட்டு அமர்ந்தவாறு வலியால் கூச்சலிட்டார். 

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அவரை அவரது வெட்டப்பட்ட உடல் பாகத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

0 comments:

Post a Comment