சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, June 23, 2013

Local News Story

By on 10:38 AM
மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு குளப்பங்கள்




கன்னியா வெந்நீரூற்றுக்கருகில் விகாரை அமைக்க ஒரு ஏக்கர் காணி!கடற்படையினர் முகாம் அமைக்க தலைமன்னாரில் காணி சுவீகரிக்க திட்டம்

திரு­கோ­ண­மலை நிருபர் வர­லாற்றுப் புகழ்பெற்ற கன்­னியா வெந் நீரூற்றுக் கிணற்­றுக்­க­ருகில் விகாரை அமை க்க வில்கம் ரஜ­மஹா விகாரை பிர­தம குரு­வுக்கு ஒரு ஏக்கர் காணி அர­சாங்­கத்தால் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளமை இந்­துக்கள் மத்­ தியில் பெரும் கவ­லையைத் தோற்­று­வித்­துள்­ளது.

இரா­வ­ணேசன் புகழ்­கொண்­டதும் இந்­து க்­களின் புராண இதி­கா­சங்­க­ளுடன் தொடர்பு கொண்­ட­து­மான கன்­னியா வெந்நீரூற்­றுக்கு நேரே பின்­புறம் 'விகாரை­யொன்றை அமை ப்­ப­தற்கு வில்கம் ரஜ­மஹா விகாரை பிர­த­ ம­குரு கேட்­டுக்­கொண்­ட­தற்கு அமைய சுமார் 0.4120, ஹெக்டர் காணியை வழங்க கொழும்பு காணி ஆணை­யாளர் நாயகம் மாகாண காணி ஆணை­யா­ள­ருக்கு அனு­மதி வழங்­கி­யதன் பேரில் மேற்­படி காணி பௌத்த விகாரை நிறுவhகத்திடம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விகாரை இந்­துக்கள் தமது ஈமக்­கி­ரி­யை­களை செய் யும் மடம் அமைந்­தி­ருக்கும் இடத்­துக்கு அரு­கிலும் வெந்நீர் ஊற்­றுக்கு நேர­டி­யாக அரு­கிலும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இங்கு தொன்­மை­மிக்க சிவன் ஆல­ய­மொன்று இருப்­ப­துடன் இஸ்­லா­மி­யர்­களை அடையா­ளப்­ப­டுத்தும் சமா­தி­யொன்றும் இருக்­கின்ற நிலை­யி­லேயே இவ்­வி­காரை அமைக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது.

தொல்­பொருள் ஆய்வு என்ற கார­ணங்கள் காட்­டப்­பட்டு இவ்­வாறு மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் இந்­துக்­களின் மனங்­களைப் புண்­ப­டுத்தும் செய­லென்றும் விசனம் தெரி­விக்­கப்­ப­டு­கின் றது.

இவ்­வி­கா­ரையை நிறு­வு­வ­துடன் பல நூறு வரு­டங்­க­ளாக பாவ­னையில் உள்ள பாதையை மாற்ற திட்­ட­மிட்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது. விகாரையை தரி­சித்த பின்பே கிணற்றில் நீரா­டக்­கூ­டிய விதத்­திலும் இப்­பாதை அமைக்­கப்­ப­ட­வி­ருப்­ப­ தா­கவும் இதுவரை காலமும் கிணற்றை நேரடியாக அடையக்கூடியதாக இருந்த பாதை தற்பொழுது விகாரையை முதன்மை ப்படுத்தி அமைக்கப்பட விருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையினர் முகாம் அமைக்க தலைமன்னாரில் காணி சுவீகரிக்க திட்டம்
தலை­மன்னார் பியர் பிர­தே­சத்தில் இலங்கை கடற்­ப­டை­யினர் முகாம் அமைப்­ப­தற்­காக சுமார் முப்­பது ஏக்கர் காணி சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக வவு­னியா மன்னார் மாவட்ட காணி உத்­தி­யோ­கத்தர் அறி­வித்­துள்ளார்.


காணி சுவீ­க­ரிப்பு சட்­டத்தின் 2 ஆம் பிரி வின் கீழ் இது தொடர்­பான அறி­வித்தல் குறித்த பகுதி மக்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டுள்ளது. சுவீ­க­ரிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்ள காணி மன்னார் மாவட்­டத்தின் மன்னார் பிர­தேச செய­லகப் பிரி­விற்­குட்­பட்ட தலை­மன்னார் பியர் கிரா­மத்தில் அமைந்­துள்ள முப்­பது ஏக்கர் பரப்ப­ளவு கொண்­ட­தாகும்.

இந்தக் காணியின் வடக்கு பகுதி கடல் எல்­லை­யையும் கிழக்கு ரயில் நிலைய வீதி­யையும் தெற்கு சேமக்­கா­லை­யையும்மே கடற்படையினர்...

தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடற்­ப­டை­யி­னரின் தம்­பன்னா படை­ய­ணியை அமைப்­ப­தற்­கா­கவே இக்­காணி சுவீ­க­ரிப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இக்­கா­ணிக்கு மன்னார் மறை­மா­வட்ட ஆயர் அதி.வண.இரா­யப்பு ஜோசப் ஆண்­டகை உரிமை கோரி நிற்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை இக்­கா­ணியில் பழைமை வாய்ந்த கத்­தோ­லிக்க திருச்­ச­பைக்­கு­ரிய தலை­மன்னார் பியர் கிறிஸ்­தவ மக்­களின் புனித சகாய மாதா ஆல­யமும் ஆயரால் முன்பு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு 1990 க்கு முன்பு சுமார் அறுபது குடும்பங்கள் குடியிருந்த காணியுமே தற்பொழுது சுவீகரிக் கப்படவுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment