பொது பல சேனாவுக்கு எதிராக தென்னிலங்கை கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்!
பொதுபல சேனா ஒரு கடும் போக்கு அமைப்பே. இவர்கள் முஸ்லிம்களை மாத்திரமல்ல கிறிதவர்களையும் விட்டு வைக்கவில்லை.
இலங்கையின் தெற்கே களுத்துறையில் மக்கொனை என்ற இடத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவுக்கு எதிராக சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கையில் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொதுபல சேனை அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் உட்பட 13 பேர் மீது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.
2008 ஜூன் மாதம் 7ஆம் தேதி கொழும்பு மாவட்டத்தில் உள்ள தலாஹேனவில் கல்வாரி என்ற கத்தோலிக்க வழிபாட்டிடத்தில் தாக்குதல் நடத்தி தங்க மாலை ஒன்றையும் கைத்தொலைபேசி ஒன்றையும் கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
ஞானசார தேரர் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர். விசாரணையின்போது கல்வாரி கத்தோலிக்க வழிபாட்டிடத்தின் போதகர் சாட்சியமளிக்கையில் வழிபாட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தன்னை மிரட்டி வந்த ஞானசார தேரர் தலைமையிலான கும்பல் ஒன்று வழிபாட்டிடத்தைத் தாக்கியதாகக் கூறினார்.
அச்சமயம் ஞானசார தேரர் தன்னை காலால் உதைத்து தாக்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.
அடுத்த கட்ட விசாரணை ஜூலை 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விசாரணைக்குப் பின் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர் பலவந்தமான கிறிஸ்தவ மதமாற்றங்களுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என சூளுரைத்துள்ளார்.

மக்கோனை லக்கல குமார கந்தையிலுள்ள தேவாலயத்துக்குரிய மாதா திருச்சொரூபத்திற்கு முன்னால் இருந்த சந்திரவட்டக்கல் வடிவத்திலான வாசற்படியை இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலர் அங்கிருந்து பலவந்தமாக அகற்றிச் சென்றுள்ளனர்.
அந்த சம்பவத்துக்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் இன்று காலை முதல் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அந்தப் பிரதேசத்தில் நிலவிய பெரும் பதற்றம் காரணமாக காவல்துறை உயர் அதிகாரிகளும் சிறப்பு அதிரடிப் படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் சந்திரவட்டக்கல்லை அகற்றியவர்கள் தேவாலய நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரிய பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
'சந்திரவட்டக்கல் என்பது அரசர்கள் காலத்திலிருந்து இருந்து வருகின்ற நாட்டின் பாரம்பரிய கலை வடிவம். அது பௌத்த மதத்துக்கு மட்டும் உரியது அல்ல. அது இந்த நாட்டு மக்கள் எல்லோருக்கும் உரிய எங்களின் பாரம்பரிய உரிமை'.அதனை அகற்றிச் சென்றுவிட்டது மட்டுமன்றி அங்கிருந்த கத்தோலிக்க மதகுருமாரையும் அவர்கள் கேவலகமாக பேசியிருந்தார்கள். அதற்கு எதிராகத் தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்' என்றார் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர்.
'சந்திரவட்டக்கல் வாசற்படியை பெயர்த்து எடுத்துச் செல்ல பொது பல சேனா பிக்குமார் பொலிசாருடன் தான் வந்திருந்தார்கள். பொலிசார் அதனை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்' என்றும் அவர் கூறினார்.
பொது பல சேனாவுக்கு அரச அனுசரணை?
இலங்கையில் பொது பல சேனா அமைப்பு தொடர்ச்சையாக பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமாகி வருகிறது.
முஸ்லிம்களின் ஹலால் உணவு சான்றிதழ் முறையை ஒழிக்க வேண்டும் என்றும் நாட்டில் மாட்டிறைச்சி வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் நடந்த போராட்டங்களின் போதும் இன்னும் முஸ்லிம்களை நேரடியாகப் பாதிக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் தொடர்பிலும் பொது பல சேனா அமைப்பினர் தொடர்பில் ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகியிருந்தன.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான துணிக்கடை ஒன்று கொழும்பில் தாக்கப்பட்ட சம்பவத்தின் போதும் பொது பல சேனா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தம்மீதான குற்றச்சாட்டுக்களை அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அப்போது மறுத்து கருத்துக் கூறியிருந்தார்.
இதேபோல அண்மைக்காலமாக கிறிஸ்தவ அமைப்புகள் மீதும் கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பிலும் பொது பல சேனா மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2008-ம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பின் புறநகர்ப்பகுதியான தலாஹேனவில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ வழிபாட்டிடம் ஒன்றில் வைத்து பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் கிறிஸ்தவ போதகரை காலால் உதைத்து வழிபாட்டிடத்தை தாக்கியதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொது பல சேனா அமைப்புக்கு அரசின் உயர் பீடத்தின் அனுசரணை இருப்பதாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.
அந்த அமைப்பின் பயிற்சிக்கூடமொன்றை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச முன்னின்று திறந்துவைத்திருந்தார்.
அது அந்த அமைப்பை மேலும் ஊக்குவிக்கும் செயல் என்று நாட்டின் நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் அப்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பௌத்தர்களுக்கே சொந்தம் என்று பொது பல சேனா அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கு அகில இலங்கை இந்து மாமன்றமும் கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment