சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, June 28, 2013

Local News Story

By on 1:25 AM

நாம் அரசிலிருந்து விலகமாட்டோம் ;விரும்பினால் வெளியேற்றலாம்: ஹஸன் அலி






13ஆவது திருத்தச் சட்டத்தில் மேலும் திருத்தங்களைக் கொண்டுவருவது தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொள்ளவில்லை என்பதற்காக நாம் ஒருபோதும் அரசாங்கத்தை விட்டு வெ ளியேறப் போவதில்லை. ஆனால் ஜனாதிபதி எம்மை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற விரும்பினால் அவர் அதனைச் செய்ய முடியும் என அக் கட்சியின் செயலாளர் நாயகம் ஹனை் அலி எம்.பி. தெரிவித்துள்ளார்.


எம்மை தெரிவுக் குழுவில் சேர்த்துக் கொள்ளுமாறு நாம் ஒருபோதும் அரசாங்கத்தைக் கோரப் போவதில்லை. எம்மை அக் குழுவில் இணைத்துக் கொள்ளவில்லை என்பதற்காக நாம் கவலைப்படவும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன மாத்திரமன்றி அரசாங்க கூட்டணியில்  அங்கம் வகிக்கும் லங்கா சமசமாஜக் கட்சி கூட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை 13ஆவது திருத்தச் சட்டத்தில் மேலும் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என அரசாங்கத்தினால் வட மேல் மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment