சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, June 28, 2013

Local News Story

By on 1:23 AM

முஸ்லிம் காங்கிரஸ் - கூட்டமைப்பு சந்திப்பு


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருசலாமில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர்  எம்.ரீ.ஹசன் அலி உள்ளிட்டோரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த முக்கிய சந்திப்பின்போது நிகழ்கால அரசியல் சூழ்நிலை குறித்து பேசப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் மு.கா. ஐக்கிய தேசிய கட்சியை சந்தித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 comments:

Post a Comment