மாடறுப்புக்கு எதிரான சிங்கள ராவயவிண் கண்டன பேரணி நிறைவு
மாடு வெட்டுவதை தடைசெய்யுமாறும் மதமாற்றச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் கோரி சிங்கள ராவய அமைப்பு கதிர்காமத்தில் ஆரம்பித்த கண்டனபேரணி நேற்று கொழும்பில் முடிவடைந்தது. கடந்த வாரம் கதிர்காமத்திலிருந்து சிங்கள ராவய அமைப்பினர் கொழும்பு நோக்கிய கண்டன பேரணியினை ஆரம்பித்திருந்தனர்.
இவர்கள் நேற்று பாணந்துறையிலிருந்து கொழும்பு வரை பேரணியாக சென்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவிடம் மகஜரை சமர்ப்பித்துள்ளனர். பாணந்துறையிலிருந்து அலரிமாளிகை வரை காலிவீதியால் இவர்கள் பாத யாத்திரையாக சென்றதை அடுத்து பம்பலப்பிட்டியவில் உள்ள முஸ்லிம் உணவகங்களுக்கு சென்ற பொலிஸார் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கோழி இறைச்சி உட்பட இறைச்சி வகைகளை ஒளித்து வைக்குமாறு அறிவுறுத்தியிருந்ததாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரின் அறிவித்தலை அடுத்து பம்பலப்பிட்டி சந்திப்பகுதியில் அமைந்திருந்த உணவகங்களில் பொரித்த கோழி இறைச்சி உட்பட இறைச்சி வகைகள் ஒளித்து வைக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதேவேளை பாதயாத்திரையில் ஈடுபட்டவர்களில் சிலர் பொல்லுகளுடனும் கலந்து கொண்டதாகவும் நேரில் கண்ணடவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:
Post a Comment