சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, June 26, 2013

Selected International News

By on 10:49 PM

அதிகரித்த செலவு: இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கிறது அமெரிக்கா!


அமெரிக்கா தனது இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. 2017 ஆம் ஆண்டில் 80 ஆயிரம் ராணுவ வீரர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. செலவை குறைப்பதன் ஒரு பகுதியாக 2 ஆவது உலகப்போருக்கு பிறகு பெரிய அளவில் அராணுவ வீரர்களை குறைக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இராணுவ வீரர்களை குறைப்பதற்கான அமெரிக்க அரசின் திட்டம், பல்வேறு இராணுவ முகாம்களை பாதிக்கும் என்று  அமெரிக்காவின்இ ராணுவ தலைவர் ஜெனரல் ரேமண்ட்ஒடீர்ணோ தெரிவித்துள்ளார். ஆனால், ஆசியா, பசிபிக் பகுதிகளில் இது பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் கூறுகிறார்.மொத்தம் 12 பிரிகேடுகள் அமெரிக்காவிற்கு உள்ளன. அதில் ஜெர்மனியில் உள்ள 2 பிரிகேடுகளை அமெரிக்கா முற்றிலும் விலக்கிக் கொள்ளும்.

0 comments:

Post a Comment